கோவை மாவட்டம் பொள்ளாச்சி காளியாபுரம் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு, அப்பகுதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏப்ரல் 13ஆம் தேதி குழந்தை பிறந்தது. பிரசவத்தின்போது அவருக்கு சளி, காய்ச்சலிருந்ததால் அவரின் ரத்த, சளி மாதிரிகள் பரிசோதனைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
பரிசோதனையில் அவருக்கு கரோனா பாதிப்பிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனால் அவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து அவர் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார். அவரது
குழந்தைக்கு கரோனா பாதிப்பில்லை என மருத்துவர்கள் உறுதிசெய்துள்ளனர். இருந்தும் குழந்தை தனிவார்டில் வைக்கப்பட்டு கவனிக்கப்பட்டுவருகிறது. மேலும் அவருக்குப் பிரசவம் பார்த்த செவிலியர், மருத்துவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொள்ளாச்சியில் கிருமி நாசினி சுரங்கம் திறப்பு!