கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் சுவாமி விவேகானந்தா சேவா கேந்திரம் சேவாபாரதி சார்பில் 300 படுக்கைகளுடன் கரோனா பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இங்கு ஏ-சிம்டம்ஸ் உள்ள நோயாளிகள் அனுமதிக்கப்பட உள்ளதாகவும், ஒரு அறையில் இரண்டு பேர் வீதம் அனுமதிக்கப்பட உள்ளதாகவும், அவர்களுக்குத் தேவையான உணவு, மருத்துவ வசதி இலவசமாக வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவர்கள், செவிலியருடன் 50க்கும் மேற்பட்ட சேவாபாரதி அமைப்பின் தன்னார்வலர்கள் இங்கு சேவை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த மையத்தினை கோவை அரசு மருத்துவமனை முதல்வர் மருத்துவர் நிர்மலா, குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.