ETV Bharat / state

ஒரே காலனியில் 21 பேருக்கு கரோனா!

கோயம்புத்தூர் கருத்தம்பட்டி சோமனூர் செல்வபுரம் காலனியில் 21 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Corona affected for 21 people in same colony  coimbatore  coimbatore news  coimbatore latest news  coimbatore Corona infection  Corona affected for 21 people in same colony in coimbatore  கோயம்புத்தூர் செய்திகள்  கோயம்புத்தூரில் ஒரே காலனியில் 21 பேருக்கு கரோனா  கரோனா தொற்று  கரோனா  கரோனா பரவல்  கரோனா நிலவரம்  தடை செய்யப்பட்ட பகுதி
தடை செய்யப்பட்ட பகுதி
author img

By

Published : Aug 20, 2021, 10:56 PM IST

கோயம்புத்தூர்: சோமனூர் பேருந்து நிலையம் அருகே உள்ள செல்வபுரம் காலனியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 10க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்து.

இதையடுத்து அப்பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள 456 வீடுகளில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இன்று மட்டும் 17 பேர்

இதில் இன்று (ஆக. 20) மட்டும் செல்வபுரம் காலனி பகுதியில், 17 நபர்களுக்கு தொற்று உறுதியானது. மேலும் கருமத்தம்பட்டி கொங்கு மாநகரில் 2 நபர்களுக்கும் கரோனா உறுதியானது.

கரோனா பாதிப்பு- தடை செய்யப்பட்ட பகுதி

இதையடுத்து தொற்று பாதித்த பகுதிகளில் தகர சீட் வைத்து அடைத்து விட்டனர். அங்கிருந்து உள்ளே வரவும் வெளியே செல்லவும் அனுமதி இல்லை.

இதனால் பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள், உணவு பொருள்களை பெற கருமத்தம்பட்டி பேரூராட்சி மூலம் 3 நபர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மக்களுக்கு எச்சரிக்கை

பொது மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பேரூராட்சி சார்பில் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தும், சாலையோர சாக்கடையில் கிருமி நாசினி தெளித்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

தொற்று பாதித்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் கொடிசியா சிகிச்சை மையத்திற்கும், கோயம்புத்தூர் இ எஸ் ஐ மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிதாக 1,668 பேருக்கு கோவிட் பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.