ETV Bharat / state

ஊரடங்கு தளர்வுக்கு பின்னும் சிறு தொழில்துறையில் தொடரும் பாதிப்பு!

கோவை : ஊரடங்கால் கடும் நெருக்கடிக்குள்ளாகும் சிறு-குறு தொழில் துறையின் தொழிலாளர்களுக்கு உதவ தமிழ்நாடு அரசு முன் வரவேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

author img

By

Published : May 25, 2020, 9:39 AM IST

Continuing impact on small business even after curfew
ஊரடங்கு தளர்வுக்கு பின்னும் சிறு தொழில்துறையில் தொடரும் பாதிப்பு!

கோவிட்-19 பாதிப்பை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக மூடப்பட்டிருந்த சிறு-குறு தொழில் நிறுவனங்கள் இயங்க தற்போது நிபந்தனைகளுடன் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. ஒருபக்கம் 34 வகையான சிறு-குறு தொழில் நிறுவனங்களுக்கு இயங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், மறுபக்கம் அதிலும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது.

ஊரக பகுதிகளில் பேருந்து போக்குவரத்து முழுமையாக முடக்கப்பட்டுள்ளதால் தளர்வு அறிவித்தும் அந்தந்த தொழில் நிறுவனங்களுக்கு செல்ல முடியாமல் தொழிலாளர்கள் பலரும் அவதியுற்று வருகின்றனர். பெரும் தனியார் துறை நிறுவனங்கள் அவர்களது நிறுவன வாகனங்களில் தொழிலாளர்களை அழைத்து வர அனுமதி அளித்தது. ஆனால் சிறு குறு நடுத்தர தொழில் முனைவோர் மற்றும் தொழிலாளர்களின் நிலை இன்றும் கேள்வி குறியாகவே உள்ளது.

இது குறித்து பேசிய பிளம்பர் முருகவேல் பேசுகையில், “ ஊரடங்கிலிருந்து அரசு தளர்வு அளித்தும் பேருந்து இல்லாததால் வேலைக்கு செல்ல இயலாமல் தவித்து வருகிறோம். வேலை செய்யும் நிறுவனங்களில் இருந்து எங்களை வரச்சொல்லி அழைத்து கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால், வேலைக்கு செல்ல போக்குவரத்து வசதிகள் இல்லாததால் வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பயணக் கட்டுப்பாடுகள் உள்ளதால் பெரும் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறோம். வருமானமும் இல்லை, அரசு கொடுத்த உதவி தொகையும் போதவில்லை என்ற நிலையில் அடுத்தவேளை உணவுக்கு என்ன செய்வதென தெரியாமல் தவிக்கிறோம். அரசு பேருந்து வசதிகள் செய்து கொடுத்து தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல ஏதாவது வழிவகை செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுக்கின்றார்.

சிறு-குறு நிறுவனங்கள் 50% ஊழியர்களை மட்டுமே கொண்டு செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளதால் எண்ணிக்கை குறைவாகவே பணிக்கு செல்ல இருக்கும் தொழிலாளர்கள் தகுந்த இடைவெளியோடு பயணம் மேற்கொள்ள முடியும் என்கின்றனர் சிறு - குறு தொழிலாளர்கள்.

நமது ஈடிவி பாரத்திடம் தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் அளித்த பேட்டியில், “ஊரடங்கிலிருந்து தொழில்துறை, வர்த்தக துறைக்கு அரசு தளர்வுகளை அறிவித்து இருக்கின்றது. ஆனால், அதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதை உணர முடிகிறது. ஊரக பகுதிகளில் உள்ள தொழில்துறை நடத்திக்கொள்ளலாம் என்றும் மாவட்ட நகர்ப்பகுதிகளில் உள்ள துறையை இயக்கக் கூடாது என்றும் இருவேறு நிலைப்பாடுகள் அறிவித்திருப்பது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ஊரகப் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு வரும் பலரும் நகர் புறங்களில் இருந்தும், ஊரக பகுதிகளில் உள்ள நிறுவனங்களை தாண்டி பல கிலோமீட்டர்கள் தாண்டி உள்ளனர். இவர்கள் வருவதற்கு பேருந்துகள், வசதிகள் இல்லாததால் அவர்கள் வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் வருவதற்கு ஏதேனும் அரசு உதவி செய்திட வேண்டும். காலை, மாலை என இரு வேளைகளில் போக்குவரத்து வசதிகள் செய்து தந்தால் தொழிலாளர்கள் வந்து வேலை செய்வதற்கு மிக பயனுள்ளதாக இருக்கும்; தொழில் துறையும் இழப்பிலிருந்து மீள்வதற்கு உதவியாக இருக்கும். இதெல்லாம் அரசு மனதில் வைத்துக்கொண்டு தொழில் துறையையும் தொழிலாளர்கள், தொழில் முனைவோர்கள் அனைவரும் இழப்பில் இருந்து திரும்ப அரசு உதவி செய்ய வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

உழைக்க தயராக உள்ள தாங்களுக்கு, வேலைக்கு செல்ல பயண வசதியை ஏற்படுத்தி தர அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க : வாழ்வாதாரம் பாதிப்பு: நிவாரணம் கேட்கும் பூட்டு உற்பத்தி தொழிலாளர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.