கோவை மாவட்டம் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர், நாட்டின் பொருளாதார மந்த நிலையை கண்டித்தும், மத்திய அரசின் தவறான கொள்கையை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாநில செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில், தமிழ்நாடு மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய்தத், காங்கிரஸ் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சஞ்சய்தத், 'தமிழ்நாடு அரசு மத்திய அரசின் கைப்பாவையாக உள்ளது. பொருளாதார ரீதியில் 45 ஆண்டுகளுக்கு இல்லாத அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது, தவறான பொருளாதார கொள்கையே இதற்கு காரணம். இதனால் தொழில் துறை, விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு மக்கள் சிரமத்தில் உள்ளனர். இந்த வீழ்ச்சியை மீட்டெடுப்பது காங்கிரஸ் கட்சியின் கடமை' என்று கூறினர்.
இதையும் படிங்க: ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ பட்னாவிஸின் பழைய ட்வீட்டை கலாய்க்கும் நெட்டிசன்கள்