வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார் போட்டிருக்கிறார். இதனையொட்டி பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் சைக்கிளில் வந்து கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறிய நிலையில், அதைக் கண்டிக்கும் விதமாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக சைக்கிளில் ஊர்வலமாக வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தேன்.
மக்களுக்காக பல்வேறு போராட்டங்கள் செய்து சிறை சென்றுள்ளேன். தேர்தல் முடிந்தவுடன் வானதி சீனிவாசன் தேர்தலை முடித்துவிட்டு டெல்லி சென்றுவிடுவார். கமல்ஹாசன் நட்சத்திர அந்தஸ்தை மட்டும் வைத்து தேர்தலில் நிற்கிறார். தேர்தல் முடிந்தவுடன் சென்னை சென்று விடுவார்” என்றார்.
இதனையடுத்து, ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட்டது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, பிரதமர் மோடியும் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், அவராலும் அந்தத் தொகுதியில் பணி செய்ய முடியவில்லை என்றும் பெட்ரோல் டீசல் விலையை கடுமையாக உயர்த்திய இந்த அரசுகளுக்கு மக்கள் வாக்களிப்பது மூலம் பதில் கூறுவார்கள் எனவும் கூறினார்.
இதையும் படிங்க...ELECTION BREAKING: வேட்பாளர் மாற்றம் முதல் அறிக்கை குற்றச்சாட்டு வரை!