ETV Bharat / state

கோவையில் புலம்பெயர் தொழிலாளர்கள் குடும்ப அட்டை பெறுவது எப்படி? ஆட்சியர் விளக்கம்!

கோயம்புத்தூரில் வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள், குடும்ப அட்டை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்கள் குடும்ப அட்டை பெற மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2023, 6:03 PM IST

கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் வசிக்கும் புலம் பெயர் தொழிலாளர்கள் குடும்ப அட்டை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “உச்ச நீதிமன்ற உத்தரவின்படி குடும்ப அட்டை இல்லாத, பதிவு செய்த புலம் பெயர் தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை வழங்கிட உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் கோயம்புத்துார் மாவட்டத்தில், அனைத்து வட்டங்களிலும் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த புலம் பெயர் தொழிலாளர்கள் eShram Portal-ல் பதிவு செய்துள்ளனர். அவர்களில் சிலர் நீண்ட காலமாக நிரந்தரமாக இங்கு வசித்து வருகின்றனர்.

குடும்பத்தில் உள்ள ஒரு சிலர் மட்டும் தங்களது மாநிலங்களில் வசித்து வருகின்றனர். eShram Portal-ல் பதிவு செய்துள்ள புலம்பெயர் தொழிலாளர்களில் எந்த மாநிலத்திலும் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு, தகுதியின் அடிப்படையில் குடும்ப அட்டை வழங்கிடவும் தற்காலிகமாக பணிபுரிந்து கொண்டிருப்பவர்களுக்கு அவர்களது விவரம் முழுமையாக பெறபட்டு, அவர் சார்ந்த மாநிலத்திற்கு விவரங்களை அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, eShram Portal-ல் பதிவு செய்துள்ள புலம் பெயர் தொழிலாளர்கள், நீண்ட காலமாக கோயம்புத்துார் மாவட்டத்தில் வசித்து வருபவர்கள் உரிய படிவத்தினை பூர்த்தி செய்து, தொடர்புடைய வட்டாட்சியர் அலுவலகங்களில் இயங்கி வரும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Gold price hike: இரண்டு நாட்களுக்கு பின் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.