ETV Bharat / state

குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்!

author img

By

Published : Dec 12, 2019, 3:17 PM IST

கோயம்புத்தூர்: மகளின் மருத்துவ செலவிற்கு பணம் இல்லாததால் 4 குழந்தைகளுடன் தாய் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Coimbatotre Depressed Mother attempts to kill Children self
Coimbatotre Depressed Mother attempts to kill Children self

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் கோவிந்தராஜ். இவர் தனது மனைவி அம்சவேணி, குழந்தைகள் சௌமியா, சத்யபிரியா, மணிகண்டன், சபரிநாதன் ஆகியோருடன் பீளமேடு அடுத்த தண்ணீர்பந்தல் தியாகி குமரன் வீதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், கோவிந்தராஜன் இரண்டாவது மகள் சத்திய பிரியாவுக்கு நுரையீரல் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதற்காக அம்சவேணி அவருக்கு தெரிந்தவர்களிடம் மருத்துவ சிகிச்சைக்கும், குடும்ப செலவுக்கும் பணம் கேட்டுள்ளா்.

பணம் ஏதும் கிடைக்காததால் அம்சவேணி மனஉளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று கோவிந்தராஜ் வேலை காரணமாக வெளியே சென்றபோது அம்சவேணி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து, நேற்று இரவு அரளி விதையை அரைத்து குழந்தைகளுக்கு கலந்துகொடுத்த அம்சவேணி தானும் சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

திடீரென மனம் மாறிய அம்சவேணி, தனது குழந்தைகளுடன் ஆட்டோவில் ஏறி கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று, விஷம் சாப்பிட்டது குறித்து மருத்துவர்களிடம் விளக்கியுள்ளார்.

இதையடுத்து அவர்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகளின் சிகிச்சைக்காக பணம் கிடைக்காததால் குழந்தைகளுடன் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : அவரது நிலத்தில் சுவர் எழுப்பினார்... அது எப்படி தவறாகும்?

Intro:மகளின் மருத்துவ செலவிற்கு பணம் இல்லாததால் 4 குழந்தையுடன் தாய் தற்கொலை முயற்சி

Body:தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுனர் கோவிந்தராஜ் இவர் தனது மனைவி அம்சவேணி குழந்தைகள் சௌமியா சத்யபிரியா மணிகண்டன் சபரிநாதன் ஆகியோருடன் பிளமேடு அடுத்த தண்ணீர்பந்தல் தியாகி குமரன் வீதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர் இந்நிலையில் கோவிந்தராஜன் இரண்டாவது மகள் சத்திய பிரியாவிற்கு நுரையீரல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது இதற்காக அம்சவேணி அவருக்கு தெரிந்தவர்களிடம் மருத்துவ சிகிச்சைக்கும் குடும்ப செலவுக்கு பணம் கேட்டதாக கூறப்படுகிறது பணம் ஏதும் கிடைக்காமல் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் நேற்று கோவிந்தராஜ் வேலை காரணமாக வெளியே சென்றபோது மன உளைச்சலில் இருந்த அம்சவேணி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார் அதற்கு முன்னதாக தனது குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொல்ல முடிவு செய்து நேற்று இரவு குழந்தைகளுக்கு உணவில் அரளி விதையை அரைத்து கலந்து கொடுத்து தானும் சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர் திடீரென மனம் மாறிய அம்சவேணி தனது குழந்தைகளை ஆட்டோவில் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து ஐந்துபேரும் விஷ உணவை சாப்பிட்டதாக தெரிவித்துள்ளனர் இதனையடுத்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது மக்களின் சிகிச்சைக்காக பணம் கிடைக்காததால் குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.