கோயம்புத்தூர்:கோவை மாவட்டம், கோவைப்புதூர் பகுதியில் உள்ள மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகனப்பதிவு, லைசென்ஸ் கொடுப்பது உள்பட பல பணிகளுக்கு லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்துள்ளன.
இதையடுத்து 16 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் நேற்று (பிப்ரவரி 10) மாலை மேற்கு வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 50 ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
இதனையடுத்து கைப்பற்றப்பட்ட பணத்தை அலுவலர்கள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:அதிமுக வேட்பாளர் தற்கொலை: காவல் நிலையம் முற்றுகை