கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த அட்டக்கட்டியில் உள்ள வனத்துறை பயிற்சி மையத்தில் பொள்ளாச்சி, திருப்பூர், திண்டுக்கல், கொடைக்கானல் வனக்கோட்டங்களை சேர்ந்த வனத்துறை பணியாளர்களுக்கு கோடைக்காலத்தில் வனப்பகுதியில் ஏற்படும் காட்டுத்தீயை எதிர்கொள்வது குறித்து செயல் விளக்க பயிற்சி முகாம் ஒரு வாரம் நடைபெற்று வருகிறது.
இதில் முதன்மை வன பாதுகாவலர் செல்வம், வனச்சரகர் நவீன் உள்ளிட்டோர் ஆறாம் நாளாக நேற்று வனச்சரக அலுவலர்கள், வனவர், வனக்காப்பாளர், வேட்டைத்தடுப்பு காவலர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் எதிர்பாராத விதமாக ஏற்படும் காட்டுத்தீயை குறைந்தபட்ச உபகரணங்களை கொண்டு எவ்வாறு எதிர்கொண்டு அணைப்பது, காட்டுத்தீ பெரிய அளவில் பரவாமல் தடுக்க எதிர் தீயினை உருவாக்குவது, தீத்தடுப்பு கோடுகளுக்கு அருகில் பாதைகள் உருவாக்குதல், சிறிய அளவிலான தீத்தடுப்பு உபகரணங்களை கையாளுவது ஆகியன குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
பயிற்சியில் பங்கேற்ற வனத்துறையினர், வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கு பச்சை நிற பனியன் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: தெலங்கானாவில் நடைபெற்ற ஆசியாவின் மிகப் பெரிய ஆதிவாசி திருவிழா