கோயம்புத்தூர்: நாடு முழுவதும் பொதுமக்களின் பயணத்தை எளிமையாக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் சேவையானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோவையில் இருந்து பெங்களுரூ வரை செல்லும் 8 ரயில் பெட்டிகள் கொண்ட கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவையை, அயோத்தியில் இருந்து இன்று (டிச.30) பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.
இதனை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், கோவை எம்.பி நடராஜன், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்சுணன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த வந்தே பரத் ரயிலில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பயணிகள் சென்றனர். இந்நிலையில், இந்த ரயில் சேவை ஜனவரி 1ஆம் தேதி முதல் பொது மக்கள் பயன்பாட்டிற்கு செயல்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த வந்தே பாரத ரயில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, ஓசூர், பெங்களூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
-
The soon-to-come #VandeBharat Express train is all set to enhance connectivity in the state of Tamil Nadu & Karnataka.
— Ministry of Railways (@RailMinIndia) December 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Guess the route? pic.twitter.com/cMenyv66ca
">The soon-to-come #VandeBharat Express train is all set to enhance connectivity in the state of Tamil Nadu & Karnataka.
— Ministry of Railways (@RailMinIndia) December 27, 2023
Guess the route? pic.twitter.com/cMenyv66caThe soon-to-come #VandeBharat Express train is all set to enhance connectivity in the state of Tamil Nadu & Karnataka.
— Ministry of Railways (@RailMinIndia) December 27, 2023
Guess the route? pic.twitter.com/cMenyv66ca
இந்த ரயிலில் முதல் வகுப்பில் 44 பேரும், இரண்டாம் வகுப்பில் 592 பேரும் என மொத்தமாக 636 பேர் பயணிக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய எம்.பி நடராஜன், இந்த ரயிலும், உதய் எக்ஸ்பிரஸ் ரயிலும் ஏறத்தாழ ஒரே நேரத்தில் இயக்கப்படுவதால், உதய் ரயிலின் நேரத்தை மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இந்த கோவை - பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை, இரண்டு பெரிய நகரங்களை இணைக்கும் வண்ணம் தொடங்கப்பட்டு உள்ளது.
மேலும், விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளைக் கொண்டுள்ள இந்த வந்தே பாரத் ரயிலுக்கு, பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. ரயில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருவதால், அதி வேகமாக செல்லக் கூடிய இந்த ரயிலால் பயணிகளின் பயண நேரம் பெரிதும் மிச்சமாகிறது.
இதையும் படிங்க: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.. அப்படியென்ன என்ன ஸ்பெஷல்..?