ETV Bharat / state

தேசிய அளவிலான ஸ்னூக்கர் போட்டியில் வெண்கலம் வென்ற கோவை மாணவி

தேசிய அளவிலான ஸ்னூக்கர் போட்டியில் கோவையை சேர்ந்த மாணவி வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.

author img

By

Published : Dec 30, 2022, 8:03 AM IST

Etv Bharatதேசிய அளவிலான ஸ்னூக்கர் போட்டியில்  வெண்கலம் வென்ற கோவை மாணவி

கோயம்புத்தூர்: மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான பில்லியட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் போட்டிகளில் 21 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான பில்லியர்ட்ஸ் பிரிவில் கோவையை சேர்ந்த பள்ளி மாணவி அகில இந்திய அளவில் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார். Billiards and Snooker Federation of India(BSFI) மற்றும் SAGE UNIVERSITY ஆகியவை இணைந்து தேசிய அளவிலான பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் போட்டிகளை நடத்தி வருகின்றனர். கடந்த நவம்பர் 25 ஆம் தேதி முதல் நேற்று (டிச.29) வரை போட்டிகள் நடைபெற்றன.

அதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, கோவா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் கோவையை சேர்ந்த SSVM (தனியார்) பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி சிநேந்ரா பாபு தமிழ்நாட்டின் சார்பில் கலந்து கொண்டார். இவர் 21 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான பில்லியர்ட்ஸ் பிரிவில் அகில இந்திய அளவில் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.

தேசிய அளவிலான ஸ்னூக்கர் போட்டியில்  வெண்கலம் வென்ற கோவை மாணவி
தேசிய அளவிலான ஸ்னூக்கர் போட்டியில் வெண்கலம் வென்ற கோவை மாணவி

இவருக்கு இவரது பெற்றோர், பள்ளி நிர்வாகத்தினர், பயிற்சியாளர் பிரேம் பிரகாஷ் ஆகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மாணவி சிநேந்ரா பாபு முன்னதாகவே மாவட்ட, மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:விளையாட்டு விபரீதமாகும்... விளையாட்டு திடலில் பற்றி எரிந்த தீ....

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.