நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவப்படிப்பில் சேர்ந்ததாக மாணவர் உதித் சூர்யா என்பவர் மீது கடந்த சில தினங்களுக்கு முன்பு குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து, கல்லூரி முதல்வர் அமைத்த விசாரணைக் குழுவில் ஆள்மாறாட்டம் உறுதி செய்யப்பட்டதையடுத்து மாணவர் உதித் சூர்யா, அவரது பெற்றோரை தேனி சிறப்புத் தனிப்படை காவல் துறையினர் கைது செய்து சிபிசிஐடியிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், மேலும் கோவை தனியார் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவி, ஒரு மாணவன் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து மருத்துவக் கல்வி இயக்குனரகத்துக்கு சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரி புகார் கடிதம் அளித்துள்ளது.
நீட் நுழைவுத் தேர்வு புகைப்படத்திற்கும் அனுமதி கடித புகைப்படத்திற்கும் வித்தியாசம் உள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சான்றிதழ்களில் பழைய புகைப்படத்தை ஒட்டியிருப்பார்கள் என்பதால் மீண்டும் சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புகைப்படத்தில் சற்று மாறுதல் இருப்பதால் ஆள்மாறாட்டம் என்ற முடிவுக்கு வர முடியாது என்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க:தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்பட்ட உதித் சூர்யா!