கோவை: பொள்ளாச்சியில் திமுக மாவட்ட கழக அலுவலகத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மு.க. முத்து முன்னிலையில் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வரதராஜன் தலைமையில் திமுக மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கருணாநிதியின் நினைவுநாள் அன்று மாவட்டம் முழுவதும் ஏழை-எளியோருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கி மரக்கன்றுகளை நட்டு கொண்டாட வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவன:
- கோவை தெற்கு மாவட்டத்தில் கலைஞர் அறிவாலயம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்,
- வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்துப் பகுதிகளிலும் குறிப்பாக இரண்டு நகராட்சிகள்,
- ஐந்து பேரூராட்சிகளில் வென்றெடுத்து ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்
கொங்கு மண்டலத்தில் உதயமாகும் அறிவாலயம்
இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் தேவசேனாதிபதி, மருதவேல், கன்னிமுத்து, துரை, சக்திவேல், ராசு, யுவராஜ், பொதுக்குழு உறுப்பினர் அமுதபாரதி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சாந்திதேவி, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் மங்கையர்க்கரசி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: திமுக அரசுக்கு மக்களே அரண் - அமைச்சர் செந்தில் பாலாஜி