கோயம்புத்தூரில் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் நவம்பர் 11ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுப்பதாக அம்மாணவி அப்பள்ளியின் முதல்வரிடம் புகார் அளித்திருந்தார். ஆனால் அதற்கு முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து மாணவி தற்கொலைக்குப் பின் பள்ளி முதல்வர் போக்சோ சட்டத்தின்கீழ் நவம்பர் 14ஆம் தேதி கைதுசெய்யப்பட்டு கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து பள்ளி முதல்வர் பிணை வழங்கக் கோரி கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார்.
இன்று (நவம்பர் 20) மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில், அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல்செய்வதற்கு கால அவகாசம் கேட்டு கொண்டதற்கிணங்க மனு மீதான விசாரணையை நவம்பர் 24ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: கோயம்புத்தூர் பள்ளி மாணவி மரணத்திற்கு நீதி கிடைத்திட திண்டுக்கல் எஸ்.பியிடம் மனு