கோவை: தமிழ்நாட்டில் 2019ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் சின்னதடாகம் ஊராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுக ஆதரவு பெற்ற சுதா 2,553 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றதாக முதலில் தெரிவிக்கப்பட்டது.
அதன் பிறகு அதிமுக ஆதரவு பெற்ற சௌந்திரவடிவு என்பவர் 3 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றிபெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலரால் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து சுதா கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
3 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இன்று வழக்கை விசாரித்த கோவை முதன்மை நீதிமன்ற நீதிபதி, மறு வாக்கு எண்ணிக்கையினை அடுத்த 15 நாட்களுக்குள் நடத்த வேண்டும் என உத்தரவிட்டார். சின்னதடாகம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலுக்கு மறு வாக்கு எண்ணிக்கையை நடத்த உரிய அதிகாரிகளை உடனடியாக நியமிக்கவும் கோவை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.
மேலும் மறு வாக்கு எண்ணிக்கையை ஒளிப்பதிவு செய்து அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை கொண்டே அடுத்தகட்ட உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிமன்ற உத்தரவில் உள்ளது.
இதையும் படிங்க:வள்ளுவரை செதுக்கி வாகை சூடிய புதுக்கோட்டை மாணவி அஞ்சனா ஸ்ரீ