ETV Bharat / state

கோவையில் குற்ற செயல்களில் ஈடுபட்ட மூன்று பேரின் பிணை ரத்து - காவல்துறை நடவடிக்கை

கோவையில் பிணையில் வெளிவந்து மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு, கட்டளைகளுக்கு மாறாக செயல்பட்ட மூன்று பேரின் பிணை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Coimbatore police taken action by canceling the bail of three persons involved in criminal activities
கோவையில் குற்ற செயல்களில் ஈடுபட்ட மூன்று பேரின் பிணை ரத்து
author img

By

Published : Mar 18, 2023, 1:35 PM IST

கோயம்புத்தூர்: தொடர்ந்து குற்ற சம்பவங்கள் அதிகரித்து வந்ததால் கோவை போலீசார் குற்ற சம்பவங்கள் குறித்து விரைவான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் ஆயுதங்கள் வைத்திருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வந்தனர். மேலும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்று, பிணையில் வெளிவந்த குற்றவாளிகளையும் கோவை போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். மேலும் முன்னாள் குற்றவாளிகளின் செயல்பாடுகள், சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டுபவர்கள், ஊக்குவிப்பவர்கள் குறித்து கண்காணித்து அவர்கள் மீதும், நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் பிணையில் வெளிவந்து விணை விதிகளுக்கு மாறாக செயல்பட்ட மூன்று பேர் மீது கோவை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கோவை மாநகர் பகுதியில் கஞ்சா வழக்கு, கொலை முயற்சி, வழிப்பறி மற்றும் அடிதடி வழக்கில் தொடர்பில் இருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். பின்னர் பிணையில் வெளிவந்த அவர்கள் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட்டதால் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் அவர்களது பிணை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், குனியமுத்தூர் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த ரியாசுதீன் (25) மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் நிபந்தனை கையெழுத்து இடாமல் இருந்து வந்ததால் அவரது பிணை ரத்து செய்யப்பட்டு, பிடிவாரண்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

குனியமுத்தூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட தீத்திப்பாளையம் பகுதியை சேர்ந்த காஜா என்கின்ற காஜா உசேன் (24) பிணையில் வெளிவந்த நிலையில், திரும்ப பந்தய சாலை காவல் நிலைய கொலை வழக்கில் ஈடுபட்டதன் காரணமாக அவரது பிணை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் காவல் நிலையத்தில் வழிப்பறி மற்றும் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பிரசன்னா (22) பிணையில் வெளிவந்த நிலையில் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் கையொப்பம் இடாமல் இருந்து வந்ததால் அவரது பிணையும் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது பிணை வெவ்வேறு நாட்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், கோவை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் படி பிணையில் வெளிவரும் நபர்கள் காவல்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள் என்றும், அவர்களினின் பிணைக்கு பிறப்பிக்கப்பட்ட கட்டளைகளுக்கு மாறாக ஏதேனும் நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர்களது பிணை ரத்து செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கும் நடவடிக்கைகள் தொடரப்படும் எனவும் மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: மனநலம் குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில இளைஞர் - போக்சோ சட்டத்தில் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.