ETV Bharat / state

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் கடையடைப்பு: 2,500 காவலர்கள் குவிப்பு!

கோவை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோவையில் இஸ்லாமியர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருவதால் 2,500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

coimbatore musilms protest against caa  coimbatore latest district news  குடியுரிமை சட்டம் கோவை கடையடைப்பு போராட்டம்  இஸ்லாமியர்கள் கடையடைப்பு போராட்டம்  band
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் கடையடைப்பு:2,500 போலீஸ் குவிப்பு
author img

By

Published : Dec 20, 2019, 12:43 PM IST

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவை மாவட்டத்தில் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. இந்நிலையில், இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றிரவே கோவை கோட்டை மேடு, கரும்புக்கடை, குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கறுப்புக் கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த காவலர்கள் கறுப்புக் கொடி கட்டுவதை தடுக்க முயன்றனர். இதனால் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், இஸ்லாமியர்கள் மிகுதியாக வசிக்கும் குனியமுத்தூர், கோட்டை மேடு, கரும்புக்கடை, உக்கடம் பகுதிகளில் பெரும்பான்மையான கடைகள் இன்று அடைக்கப்பட்டு கறுப்புக் கொடி ஏற்றப்பட்டிருந்தன.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் கடையடைப்பு: 2,500 காவலர்கள் குவிப்பு

மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான காய்கறி மற்றும் மருந்துக் கடைகள் திறந்திருந்தன. குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் கடை அடைப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில், கோவை மாநகரில் உச்சகட்ட காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காவல்துறை கூடுதல் இயக்குநர் ஜெயந்த் முரளி தலைமையில் 2,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். RAF எனப்படும் கலவர தடுப்பு படையினரும் ஆத்துப்பாலம், உக்கடம், காந்திபுரம் பகுதிகளில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக வஜ்ரா வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாணவர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதா? - சீமான் காட்டம்

Intro:குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கடைகளை மூடி , வீடு மற்றும் சாலைகளில் கருப்பு கொடிகளை கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..Body:குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி இந்தியா முழுவதும் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் , அரசியல் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, கோவை மாவட்டத்தில் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. இந்நிலையில் நேற்று இரவே கோவை கோட்டை மேடு, கரும்புக்கடை, குனியமுத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்கள் வீடுகளில் கருப்பு கொடியை ஏற்றி தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். அதே போல் பல வீடுகளில் இஸ்லாமிய பெண்கள் கொடிகளை கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கறுப்புகொடி கட்டுவதை தடுக்க முயன்றதால், காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் குனியமுத்தூர், கோட்டைமேடு, கரும்புக்கடை, உக்கடம் பகுதிகளில் பெரும்பான்மையான கடைகள் அடைக்கப்பட்டு , கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தன.

மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான காய்கறி மற்றும் மருந்து கடைகள் திற்ந்திருந்தன.. காய்கறி மார்க்கெட்டில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் கடை அடைப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில் கோவை மாநகரில் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஏடிஜிபி ஜெயந்த் முரளி தலைமையில் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

RAF எனப்படும்
கலவர தடுப்பு படையினரும் ஆத்துப்பாலம், உக்கடம், காந்திபுரம் பகுதிகளில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
வஜ்ரா வாகனமும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இரு கம்பெனி RAF போலீசார் கோவை போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.