தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது இந்த நிலையில் நேற்று மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விடியவிடிய கனமழை பெய்தது, கனமழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர், ஏ.டி.காலனியில் தனியார் துணிக்கடை உரிமையாளா் ஒருவரின் வீட்டு சுற்றுசுவர் இடிந்து அதனை ஒட்டியுள்ள நான்கு வீடுகளின் மீது விழுந்தது.
இடிபாடுகளில் சிக்கி வீட்டுக்குள் உறங்கிக்கொண்டிருந்த 17 பேர் உயிரிழந்தனர் காவல்துறையினரும் தீயணைப்பு துறையினரும் ஜேசிபி வாகனம் மூலம் உடல்களை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஜெய் சிங் தலைமையில் ஆறுபேர் கொண்ட மருத்துவ குழுவினர் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தனர் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் அவர்களது உடலை வாங்க மறுத்து ஒரு சிலர் மருத்துவமனை வளாகத்தில் காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அப்போது காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர்.
அதன் பின்னர் உடல்கள் தகனம் செய்வதற்காக கோவிந்தம் பிள்ளை மயானத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் தமிழக அமைச்சர் எஸ் பி வேலுமணி இரவு மயானத்திற்கு வந்தார் இறந்தவர்களின் உடலுக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார் அவருடன் மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, கோவை வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், எம்.பி ஏ கே செல்வராஜ், எம் எல் ஏக்கள் ஓகே சின்னராஜ், பி ஆர் ஜி.அருண்குமார் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள் இறந்தவர்களின் உறவினர்களுக்கு அமைச்சர் எஸ் பி வேலுமணி ஆறுதல் கூறினார்.
இதையும் படிக்க: வேளாண்மை மாணவர்கள் விவசாயிகளுக்கு நேரடி தொழில்நுட்ப செய்முறை வழிகாட்டல்!