ETV Bharat / state

ஒட்டப்படாத நாம் தமிழர் சின்னம்: மக்களிடம் செல்வாக்கைப் பெற தடுப்பதாக வேட்பாளர் குற்றச்சாட்டு - Coimbatore local body election

கோவை: மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்ட வேட்பாளர் ரூபனின் கரும்பு விவசாயி சின்னம் ஒட்டப்படாததைத் தொடர்ந்து, மக்களிடம் தங்கள் கட்சியின் செல்வாக்கை கொண்டுசெல்ல தடுப்பதற்காகவே இவ்வாறு செய்கின்றனர் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Coimbatore local body election
Coimbatore local body election
author img

By

Published : Dec 27, 2019, 11:46 AM IST

தமிழ்நாடு முழுவதும் முதல்கட்டமாக இன்று ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் கோவை மாவட்டத்திலுள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்டமாக ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சித் தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கியது.

இந்த ஊராட்சி ஒன்றியங்களில் 1,220 பதவிகளுக்கு 2,939 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் 3 லட்சத்து 46 ஆயிரத்து 350 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 293 வாக்குச்சாவடி மையங்களில் 642 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் 148 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவை எனக் கண்டறியப்பட்டு 48 வாக்குச்சாவடி மையங்களில் ஒளிப்பதிவு செய்யவும், 24 மையங்களில் வெப் கேமரா மூலம் கண்காணிக்கவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்தத் தேர்தல் பணியில் 4,494 அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர் இதுதவிர பாதுகாப்பிற்காக 2,350 காவலர்களும் 100 முன்னாள் ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாம் தமிழர் வேட்பாளர் ரூபன்

கோவை மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் ரூபனுக்கு ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னம் பட்டியலில் ஒட்டப்படாததால் தேர்தல் அலுவலரிடம் புகார் தெரிவித்தார்.

இதனையடுத்து கரும்பு விவசாயி படம் வேட்பாளர்கள் பட்டியலில் ஒட்டப்பட்டது. இதுகுறித்து ரூபன் கூறுகையில், மாற்றத்திற்கான வேட்பாளர்களாக நாம் தமிழர் கட்சியினர் போட்டியிடுகிறோம். மக்களிடம் எங்களுடைய செல்வாக்கைக் கொண்டு செல்லவிடாமல் தடுப்பதற்காக பட்டியலில் எங்களது சின்னம் விடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: மின் வாரிய அலுவலகங்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு!

Intro:கோவை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் முதல் கட்டமாக அறிந்து ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சித் தேர்தல் துவங்கியது

Body:தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் துவங்கி நடைபெற்று வருகிறது இதில் கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் முதல் கட்டமாக 5 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது 5 ஊராட்சி ஒன்றியங்களில் 1220 பதவிகளுக்கு 2939 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் 5 ஊராட்சி ஒன்றியங்களில் 3 லட்சத்து 46 ஆயிரத்து 350 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர் இதற்காக ஊராட்சி ஒன்றியங்களில் 293 வாக்குச்சாவடி மையங்களில் 642 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன இதில் 148 பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு 48 வாக்குச்சாவடி மையங்களில் ஒளிப்பதிவு செய்யவும் 24 மையங்களில் வெப் கேமரா மூலம் கண்காணிக்கவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது இந்த தேர்தல் பணியில் 4494 அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர் இதுதவிர பாதுகாப்பிற்காக 2350 காவலர்களும் 400 ஓம் காட்சி மற்றும் 100 முன்னாள் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் இதில் கோவை மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தில் இன்று காலை வாக்குப்பதிவு துவங்கியது இதில் மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட கவுன்சிலர் போட்டியிடும் ரூபன் என்பவரது ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னம் பட்டியலில் எட்டப்படாததால் தேர்தல் அலுவலரிடம் புகார் தெரிவித்தார் இதனை அடுத்து கரும்பு விவசாயி படம் வேட்பாளர்கள் பட்டியலில் ஒட்டப்பட்டது இதுகுறித்து கூறுகையில் மாற்றத்திற்கான வேட்பாளர்களாக நாம் தமிழர் கட்சியினர் போட்டியிடுவதாகவும் மக்கள் மத்தியில் தங்களுடைய செல்வத்தை கொண்டு செல்ல விடாமல் தடுப்பதற்காக பட்டியலில் தங்களது சின்னம் ஈடுபட்டுள்ளதாகவும் இதேபோல் அனைத்து பகுதிகளிலும் கரும்பு விவசாயி சின்னம் எட்டப்படவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்தார்...

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.