கோயம்புத்தூர் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றியவர் பெண் தலைமை காவலர் கிருஷ்ணவேணி. காவல் நிலையத்திற்குப் புகார் அளிக்கவரும் நபர்களிடம் கையூட்டு கேட்பதாகவும், கொடுக்க மறுத்தால் அடிப்பதாகவும் பொதுமக்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவந்த இளைஞரை சரமாரியாகத் தாக்கி சட்டையைப் பிடித்து இழுத்துச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
இதில், பாதிக்கப்பட்டவர்கள் சிலர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். இதனிடையே குற்றச்சாட்டில் சிக்கிய காவலர் கிருஷ்ணவேணி, தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்குப் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
இது குறித்து காவல் துறை உயர் அலுவலர் கூறும்போது, பெண் காவலர் மீது கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடந்துவருகிறது. விசாரணைக்குப் பின் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நகராட்சி அலுவலர்களின் அலட்சியம் - களத்தில் இறங்கிய காவலர்கள்