ETV Bharat / state

9 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட கோவை குற்றாலம்: சுற்றுலா பயணிகள் குதூகலம்

author img

By

Published : Dec 27, 2020, 4:53 PM IST

கோயம்புத்தூர்: ஒன்பது மாதங்களுக்குப் பிறகு கோவை குற்றாலம் இன்று (டிச.27) திறக்கப்பட்டது. தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளனர்.

ஒன்பது மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட கோவை குற்றாலம்!

கரோனா காரணமாக கோவை குற்றாலத்தில் கடந்த 9 மாதங்களாக சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. போதிய நீர்வரத்து இருந்தும் கோவை குற்றாலத்துக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது சுற்றுலாப் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இன்று (டிச.27) கோவை குற்றாலம் திறக்கப்படுகிறது. அருவியில் குளித்து மகிழ உள்ளே வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது.

அருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப்பயணிகள்

அருவியில் குளிக்கும் நேரம் தவிர பிற நேரங்களில் முகக்கவசம் கட்டாயம். சாடிவயலில் இருந்து குற்றாலம் உள்ளே செல்லும்வரை பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் எடுத்து வரும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை.

கோவை குற்றாலத்தில் ஆங்காங்கே குடிநீர் வைக்கப்பட்டுள்ளது. வெகுநாள்களுக்கு பிறகு கோவை குற்றாலத்தில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கோவை குற்றாலம் திறக்கப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

ஒன்பது மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட கோவை குற்றாலம்!

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அலுவலர் வெங்கடேஷ்,”அரசு கூறிய அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றி கோவை குற்றாலமானது திறக்கப்பட்டுள்ளது. பத்து நாட்களுக்கு முன்பே இங்கு வனவிலங்குகள் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்து அதன் பின்னரே கோவை குற்றாலம் திறக்க அனுமதிக்கப்பட்டது. சாடிவயலில் இருந்து கோவை குற்றாலம் அடிவாரத்திற்கு செல்லும் வரை புதிய சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன”என்றார்.

இதையும் படிங்க:தொடர் விடுமுறையால் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.