ETV Bharat / state

கோவை கோனியம்மன் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை - Coimbatore Koniamman temple News in Tamil

பிரசித்திபெற்ற கோவை ஸ்ரீ கோனியம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 14, 2023, 7:12 PM IST

கோவை: கோவையில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டவுன்ஹால் பகுதியில் கோவையின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இன்று (மே 14) அதிகாலை 3 மணியளவில் கோயில் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை போயிருப்பதை, கோயில் காவலாளி ஒருவர் பார்த்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் கோயிலில் குவிந்தனர். பின்னர் இவை குறித்து கோயில் நிர்வாகத்தினருக்குத் தகவல் அளித்த நிலையில், அங்கு விரைந்த கோயில் நிர்வாகத்தினர் மற்றும் உக்கடம் போலீசார் நடத்திய விசாரணையில், நள்ளிரவில் கோயிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இதையும் படிங்க: நாட்டு வெடிகுண்டு விபத்து - 10 விரல்களையும் இழந்த ரவுடியிடம் போலீஸ் விசாரணை

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை நிபுணர்கள் அங்கிருந்த ஆதாரங்களையும்; போலீசார் சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றினர். மேலும், சிசிடிவி காட்சிகளில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகியுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது? அதனைக் கொள்ளையடித்துச் சென்றவர்கள் யார்? இந்த சம்பவத்தில் ஒரே நபர் ஈடுபட்டாரா? அல்லது பலருடன் கூட்டு சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனரா? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் பிரசித்திபெற்ற கோனியம்மன் கோயிலில் உண்டியல் உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் பால்குட உற்சவம்.. ஆம்புலன்ஸ்க்கு வழி ஏற்படுத்திய பக்தர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.