ETV Bharat / state

'மிகச் சிறந்த வளர்ச்சியில் கோவை மாநகரம்': அமைச்சர் மனோ தங்கராஜ் - மிகச் சிறந்த வளர்ச்சியில் கோவை மாநகரம்

கோவை மாநகரம் மிகச் சிறந்த வளர்ச்சி நோக்கி சென்று கொண்டிருக்கிறது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
author img

By

Published : Nov 7, 2022, 5:22 PM IST

கோயம்புத்தூர்: நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "2030-க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் எட்ட வேண்டும் என முதலமைச்சர் முடிவெடுத்து இருக்கிறார். கோவை மாநகரம் மிகச் சிறந்த வளர்ச்சி நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

தமிழ்நாட்டிற்கு சாட்டட் அக்கவுண்ட் தேவை உள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளது போன்று சிலர் மாயத் தோற்றத்தை உருவாக்கும் முயற்சி மேற்கொள்கிறார்கள். அது தோற்றுப் போகும். கோவை மாவட்டத்தில் மக்கள் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நான் முதல்வன் திட்டத்தை அறிமுகப்படுத்தி திறன் மேம்பாட்டிற்கு முக்கிய கவனத்தை செலுத்தி வருகிறார். பிற நாடுகள் பிற மாநிலங்களை ஒப்பிடும் பொழுது தமிழ்நாட்டில் உள்ள மின் கட்டணம் நியாயமானது" என்றார்.

இதையும் படிங்க: கீழ்பவானி வாய்க்கால் நியாயப்படி பலப்படுத்தப்படும் - அமைச்சர் சு.முத்துசாமி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.