கோவை தொண்டாமுத்தூர் பகுதி உலியம்பாளையத்தைச் சேர்ந்தவர் மோனிஷா(20). இவர், தனியார் கல்லூரியில் எம்பிஏ முதலாமாண்டு பயின்று வருகிறார்.
சிறு வயதில் இருந்தே ஓவியத்தில் ஆர்வம் மிக்க இவர், கடந்த பிப்ரவரி மாதம் முட்டையின் மீது தேச தலைவர்களின் ஓவியங்களை வரைந்து சாதனை புரிந்தார்.
அதற்கு இவருக்கு கலாம் புக் ஆஃப் ரெகார்ட் , இந்தியன் புக் ஆஃப் ரெகார்ட் ஆகிய விருதுகள் கிடைத்தன. இந்நிலையில் இவர் முட்டையில் வரைந்த அப்துல் கலாம் அவர்களின் புகைபடத்திற்கு "Incredible Talent" என்ற சர்வதேச விருது கிடைத்துள்ளது.
சர்வதேச அளவில் நடைபெற்ற ஆன்லைன் போட்டியில் 6 நாடுகளில் இருந்து 2000 பேர் கலந்து கொண்டதில் 194 பேர் தேர்வாகினர்.
அதில் முதல் 25 இடங்களில் இவர் தேர்வாகி வெற்றி பெற்றுள்ளார். அதே சமயம் இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் இளம் சாதனையளர் என்ற பட்டமும் கிடைத்துள்ளது.
அதுமட்டுமின்றி ஊரடங்கு காலத்தில் மினியச்சர் பொருள்கள், ஓவியம் போன்ற பலவற்றை தாமாக செய்து வருகிறார். இதை ஒரு வருமானமாகவும் செய்து வருகிறார்.
அதுமட்டுமின்றி இவர் கின்னஸ் சாதனைக்கு ஓவியம் வரைந்து முடிவிற்காக காத்து கொண்டுள்ளார். இவரின் இந்த முயற்சிகளுக்கு அப்பகுதியில் பெரும் ஆதரவு இருந்து வருகிறது.
இதையும் படிங்க...கரோனா காலத்தை நம்பிக்கையோடு எதிர்கொண்ட சிங்கப்பெண்களின் கதை!