கோவை: வடிவேலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கமலாத்தாள். ஒரு ரூபாய்க்கு இட்லி வியாபாரம் செய்துவருகிறார். இவரது சேவையைப் பார்த்து, ஆனந்த் மகேந்திரா, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பாரத் கேஸ், ஹெச்.பி. கேஸ் நிறுவனங்கள் முன்வந்து பல்வேறு உதவிகளைச் செய்துவருகின்றன.
மேலும், மாதந்தோறும் இரண்டு இலவச சிலிண்டர்களும் வழங்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில்,அதனை வழங்கிவரும் நரேந்திர மோடியைச் சந்திக்க ஆவலோடு இருப்பதாக கோவை இட்லி பாட்டி தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி இருக்கும் இடத்திற்கே சென்று சந்திக்க அனுமதி வேண்டுமெனவும், இல்லையெனில் தன்னுடைய இடத்திற்கு பிரதமர் வந்து இட்லி சாப்பிட்டுச் செல்ல வேண்டும் எனவும் நரேந்திர மோடிக்கு இட்லி பாட்டி வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:பொள்ளாச்சியில் ரூ. 14 லட்சம் மதிப்புள்ள மதுக்கள் அழிப்பு