ETV Bharat / state

வடமாநிலத் தொழிலாளர்களிடம் இந்தி மொழியில் எடுத்துரைத்த கோவை டிஎஸ்பி! - full details of north indian workers issue

வடமாநிலத் தொழிலாளர்களை நேரில் சந்தித்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அவர்களிடம் வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்த வதந்தி தொடர்பாக இந்தி மொழியில் எடுத்துரைத்தார்.

வடமாநில தொழிலாளர்களிடம் இந்தி மொழியில் எடுத்துரைத்த கோவை டிஎஸ்பி!

author img

By

Published : Mar 5, 2023, 4:44 PM IST

வடமாநிலத் தொழிலாளர்களை நேரில் சந்தித்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அவர்களிடம் வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்த வதந்தி தொடர்பாக இந்தி மொழியில் எடுத்துரைத்தார்

கோயம்புத்தூர்: கடந்த சில தினங்களுக்கு முன்பு வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவால் தமிழ்நாட்டில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் மத்தியில் அச்சம் உண்டானது. அதிலும், திடீரென திருப்பூர் ரயில்வே தண்டவாளத்தில் ஒருவர் உயிரிழந்த செய்தியால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் பரபரப்புக்கு ஆளாகினர்.

ஆனால், இது விபத்து என ரயில்வே காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும், இது தொடர்பாக பல்வேறு வீடியோக்கள் மற்றும் பரபரப்பான செய்திகள் பரவியதை அடுத்து, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்லத் தொடங்கி உள்ளனர்.

முக்கியமாக கோவை, திருப்பூர் உள்ளிட்டப் பகுதிகளில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஏராளமான வடமாநிலத்தொழிலாளர்கள், அவர்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். இதனால் தங்களது தொழில்கள் பாதிக்கப்படுவதாக பல்வேறு தொழிற்சாலை சங்கத்தினர் உள்பட தனியார் நிறுவனத்தினரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் துறை சார்பில் இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், இது போன்று வீடியோக்களை பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோவை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோரும் வடமாநிலத் தொழிலாளர்களை நேரில் சந்தித்து, மாவட்ட நிர்வாகம் தரப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை எடுத்துக் கூறினர்.

அப்போது பல்வேறு பகுதிகளிலும் இந்தி மொழி தெரிந்தவர்களை வைத்து வடமாநிலத் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையும் தொடந்து நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று (மார்ச் 5) துடியலூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் நேரில் சந்தித்தார்.

அப்போது அவர்களிடம் இந்தி மொழியில் கலந்துரையாடிய காவல் கண்காணிப்பாளர், சமூக வலைதளங்களில் வதந்திகளாக பரப்பப்படும் வீடியோக்களை யாரும் நம்ப வேண்டாம் எனவும், கோவை மாவட்ட காவல் துறை சார்பில் வடமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விவரித்தார்.

மேலும் வடமாநிலத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளையும் அவர் கேட்டறிந்தார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், ''இங்குள்ள வடமாநிலத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடியபோது, வடமாநிலத் தொழிலாளர்கள் தங்களுக்கு எந்த விதப் பாதிப்பும், பிரச்னைகளும் இல்லை எனத் தெரிவிக்கின்றனர்.

ஆனால், அவர்களது குடும்பத்தினர் அச்சம் கொள்வதாகவும், எனவே, தங்களை சொந்த ஊர்களுக்குத் திரும்பி வந்து விடும்படி நிர்பந்திக்கிறார்கள் எனவும் கூறுகின்றனர். இங்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், பாதிப்பின்மை குறித்து நீங்களும் உங்களது சமூக வலைதளப் பக்கங்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எடுத்துக் கூறுங்கள் என வட மாநிலத் தொழிலாளர்களிடம் கேட்டுக்கொண்டோம்.

மேலும், ஹோலிப் பண்டிகை கொண்டாடுவதற்காக தற்போது வடமாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றாலும், அவர்கள் திரும்பி வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. கோவை மாவட்ட காவல் துறையினர், தொடர்ந்து வடமாநிலத் தொழிலாளர்களை சந்தித்து வருகின்றனர்.

தொழில் நிறுவனத்தினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். வடமாநிலத் தொழிலாளர்கள் காவல் துறையினரை தொடர்பு கொள்ளும்போது, அவர்கள் மொழியிலேயே பேசுவதற்காக அதற்கான நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "சீமான், பாஜக தான் வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினைக்கு காரணம்" - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.