ETV Bharat / state

Senthil Balaji: செந்தில் பாலாஜி கைதை எதிர்பார்த்து காத்திருந்த கோவை திமுகவினர்.. காரணம் என்ன?

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்வதை விடிய விடிய எதிர்நோக்கி கோவை திமுகவினர் காத்திருந்ததற்கு காரணம் என்ன என்பது குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு..

in Coimbatore DMK members waiting for the minister Senthilbalaji arrest during the enforcement directorate raid
செந்தில் பாலாஜி கைது திமுகவினரின் கருத்து
author img

By

Published : Jun 14, 2023, 6:48 PM IST

கோயம்புத்தூர்: கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிட்டவர்கள் யாரும் வெற்றி பெறாத நிலையில் 10 சட்டமன்ற தொகுதியிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. இதனை அடுத்து கோவை மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொது மக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்டங்களை கண்காணிக்க, கோவை மாவட்டத்துக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் அதிரடியாக தனது பணிகளை செந்தில் பாலாஜி துவக்கினார். எந்த கூட்டம் நடத்தினாலும் அதை பிரமாண்டமாகவே செய்தார் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களைக் கூட்டினார்.

மேலும் ஆயிரக்கணக்கானோரை திமுகவில் இணைய செய்தது, நலத்திட்ட உதவிகள் பெரிய அளவில் வழங்கியது, என தனது செயல்பாட்டினை அமைச்சர் செய்து கொண்டு இருந்தார். அதே சமயம் டாஸ்மாக் கடைகளில் இருந்து உள்ளூர் பிரமுகர்களுக்கு (ஆளும் கட்சியினர்) வரக்கூடிய மாமூல்களை தனக்கு வேண்டப்பட்ட நபர்களுக்கு (கரூர் நபர்கள்) மட்டும் சென்றடையும் வகையில் பார்த்துக் கொண்டார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந்த விவகாரத்தில் உள்ளூர் திமுகவினர் அமைச்சர் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். எனினும், அவர் பொறுப்பு அமைச்சர் என்பதால் அதனை வெளிக்காட்டாமல் பணியாற்றி வந்தனர். அதே சமயம் திமுக நிர்வாகிகள் தங்கள் பணிகளை சரியாக செய்ய வேண்டும், திமுக எந்த ஒரு இடத்திலும் தோல்வியை தழுவக் கூடாது, அப்படி தழுவினால் அந்த நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்து வந்தார்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனை தொடர்ந்து கோவை மாவட்ட திமுகவில் ஐந்து மாவட்டப் பொறுப்பாளர்கள் இருந்த நிலையில், அதை மூன்றாக மாற்றினார். சிங்காநல்லூர், கோவை தெற்கு, கோவை வடக்கு ஆகிய தொகுதிகள் கோவை மாநகர் மாவட்டமாகவும், மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், அவிநாசி தொகுதிகள் கோவை வடக்கு மாவட்டமாகவும் மாற்றப்பட்டது.

மேலும், சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை, பொள்ளாச்சி தொகுதிகள் கோவை தெற்கு மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டது. இதனால் மாவட்ட செயலாளர்கள் கனவில் இருந்த நிர்வாகிகள் செந்தில்பாலாஜி மீது அதிருப்தி அடைந்தனர். அதேபோல்
செந்தில் பாலாஜி வருகைக்கு முன்பு, டாஸ்மாக் கடை மூலமும் ஆளும் கட்சியினருக்கு மாதம் 50,000 முதல் வருமானம் வந்து கொண்டிருந்தது என சொல்லப்படுகிறது.

அதை அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மூலம் பகுதி செயலாளர், ஒன்றிய செயலாளர், வட்ட செயலாளர் வரை அனைவருக்கும் பிரித்துக் கொண்டனர் எனக் கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி வருகைக்கு பிறகு, அந்தப் பணம் முழுவதும் கரூரில் இருந்து வந்தவர்கள் வாங்கிக்கொள்கின்றனர். இப்போது கடைக்கு 80,000 வரை அவர்களுக்கு செல்கிறது. ஒரு ரூபாய் கூட எங்களுக்கு வருவதில்லை என திமுகவினர் புலம்பி வருகின்றனராம்.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத திமுக நிர்வாகிகள் கூறுகையில், “கோவைக்கு பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டது ஆரம்பத்தில் தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கொங்கு மண்டலத்தில் திமுக வளர்ச்சிக்கு உதவும் என பெரும் நம்பிக்கை இருந்தது, அதை போல் திமுகவும் மக்கள் மத்தியில் ஓரளவு பெயர் பெற்றது.

ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி கட்சி வளர்ச்சி குறித்து கோவையில் உள்ள நிர்வாகிகளிடம் எதுவுமே அவர் பேசுவதில்லை. நாங்கள் கொடுக்கும் நியாயமான கோரிக்கைகளை கூட அவர் கண்டுகொள்வதில்லை. டாஸ்மாக் முதல் சிறு சிறு பணிகள் வரை அனைத்துமே கரூர் கம்பெனிக்கு தான் செல்கிறது, எங்களுக்கு எந்தவித பயனும் இல்லை.

கட்சிக்காக காலம் காலமாக உழைப்பவர்கள், ஆட்சியில் இருக்கும்போது ஏதாவது சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அதற்கு அமைச்சர் முட்டுக் கட்டையாக இருந்தார். கோவையில் உள்ள பெரும்பாலான திமுகவினர் விடிய விடிய அவருடைய கதையே எதிர்நோக்கி இருந்தனர்” எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: Senthil Balaji Arrest: "செந்தில் பாலாஜியை விலக்கி வைப்பது திமுகவுக்கு நல்லது" - பொன்.ராதாகிருஷ்ணன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.