ETV Bharat / state

கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்... - Jamaat confederates

கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து ஜமாத் அமைப்பினருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அனைத்து ஜமாத் கூட்டமைப்பினருடன் கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம்

author img

By

Published : Oct 27, 2022, 6:54 AM IST

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பினருடன் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது கோவை மாவட்ட ஜமாத் அமைப்பினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அப்போது கோவையில் நிலவி வரும் சூழல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மற்றும் வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர், ஜி.எஸ்.சமீரன், “இந்த கூட்டத்தில் கோவை மாநகரில் ஏதேனும் அசம்பாவிதங்கள் குறித்த தகவல் இருந்தால் மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

அனைத்து ஜமாத் அமைப்பினரும் இந்த சம்பவத்தை கண்டிப்பதாக தெரிவித்துள்ளனர். அனைத்து மத தலைவர்கள் உடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தற்போது அதனை இன்னும் வலுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்” என தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் கண்காணிப்பாளர் பேட்டி

இதனையடுத்து பேசிய மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், “கோவை மாநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சரின் அறிவுறுத்தலின்பேரில் ரோந்து பணிகள், செக்போஸ்டுகள் அனைத்தும் 24 மணி நேரம் செயல்படுகிறது. சம்பவம் நடந்த சில மணி நேரத்திற்குள்ளாகவே குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்ட அனுமதியைப் பொறுத்தவரை, சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும்” என்றார்.

இதையும் படிங்க: கார் வெடிப்பில் முழு சதியையும் வெளிக்கொணர்ந்து மக்களின் அச்சத்தைப் போக்குக: மநீம

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.