கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகின்ற வகையில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பம், விளம்பர போஸ்டர்களை அகற்றுவது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி, கோவை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள், விளம்பர போஸ்டர்கள் மற்றும் விளம்பர பதாகைகளை 10 நாட்களுக்குள் அகற்றிட வேண்டும்.
அவ்வாறு 10 நாட்களில் அகற்றப்படவில்லை என்றால், மாநகராட்சி சார்பில் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இனிவரும் காலங்களிலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் கொடிக்கம்பங்கள், விளம்பர போஸ்டர்கள் மற்றும் விளம்பரப் பதாகைகள் உள்ளிட்டவற்றை வைப்பதை அரசியல் கட்சியினர் தவிர்த்திடுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் மாநகர காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாநகராட்சி ஆணையாளர் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: Video:செஸ் ஒலிம்பியாட் 2022- தங்க செஸ் காயின்களை செய்து அசத்திய நகை தொழிலாளி