கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், கோவை மாவட்டத்தில் இன்று 273 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை நான்காயிரத்து 52 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 296 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து, மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 427 ஆக அதிகரித்தது.
இன்று ஒரே நாளில் வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.