கோயம்புத்தூர் மாநகராட்சி மேயராக திமுகவின் கல்பனா ஆனந்தகுமார் உள்ளார். முன்னதாக இவர் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்ட பழைய காரை பயன்படுத்தி வந்தார். 10 நாட்களுக்கு முன்பு மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயருக்கு புதிதாக இரண்டு இன்னோவா கார்கள் வாங்கப்பட்டன. இந்த காரிலேயே மேயர் பணிகளை மேற்கொண்டுவருகிறார்.
ஆனால் 10 நாட்களுக்கு மேலாகியும் காரில் பதிவு எண் குறிப்பிடப்படவில்லை. இதனால் நெட்டிசன்கள் பதிவு எண் இல்லாமல் வாகனங்கள் இயக்குவது மோட்டார் வாகன சட்டப்படி குற்றம், மக்கள் பிரதிநிதி 10 நாட்களுக்கு மேலாக பதிவு எண் குறிப்பிடாதது விதிமீறலுக்கு சமம் என்று கருத்து தெரிவித்துவருகின்றனர்.
பதிவு எண் இல்லாத காரில் வருவது தொடர்பாக கோவை மாநகராட்சி மேயரை போனில் தொடர்புகொள்ள முயற்சித்த போது போனை எடுத்த மேயரின் கணவர் ஆனந்தகுமார் நம்பர் பிளேட் விரைவில் வந்துவிடும் எந்த தகவல் வேண்டுமானாலும் அதிகாரிகளிடம் கேட்கவும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: வெளுத்து வாங்கிய மழை... விர்ரென உயர்ந்த தக்காளி விலை...