கோவை மாவட்டத்தில் இயங்கும் தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் சொத்து வரி செலுத்தாமல் அதிக நிலுவை வைத்திருக்க கூடிய 100 நிறுவனங்களின் பெயர் பட்டியலை கோவை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள பெயர் பட்டியலில் கோவையில் உள்ள பிரபல நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி எஸ்.என்.ஆர் சன்ஸ் குழுமம் 3 கோடியே 21 லட்சத்து 88 ஆயிரத்து 178 ரூபாய், பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி 1 கோடியே 50 லட்சத்து 49 ஆயிரத்து 174 ரூபாய், வி.எல்.பி கல்வி குழுமம் 1 கோடியே 16 லட்சத்து 80 ஆயிரத்து 467 ரூபாய் நிலுவையில் இருப்பதாக கூறப்படுள்ளது.
மேலும், இதேபோல் கோவையில் பிரபல கல்வி நிறுவனங்களான ஹிந்துஸ்தான் கல்லூரி, கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, அவிலா கான்வெண்ட் பள்ளி, ஜே.ஜி.ஐ.எஸ்.எல் டிரஸ்ட் என பல நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த பட்டியலில் உள்ள நிறுவனங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் மாநகராட்சியின் விதிப்படி ஜப்தி செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், தாமதிக்காமல் உடனடியாக வரி செலுத்த வேண்டும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.