ETV Bharat / state

மிக்ஜாம் புயல் மீட்புப் பணி; சென்னை விரைந்த கோவை மாநகராட்சி பணியாளர்கள்!

Michaung Cyclone: மிக்ஜாம் புயல் மீட்புப் பணிக்களுக்காக கோவையில் இருந்து 400க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர் குழு சென்னை விரைந்துள்ளனர்.

coimbatore-corporation-employees-in-migjam-storm-rescue-work
மிக்ஜாம் புயல் மீட்பு பணியில் கோவை மாநகராட்சி ஊழியர்கள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2023, 8:46 AM IST

கோயம்புத்தூர்: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழந்து, மக்கள் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகிறார்கள். வீடுகள், கட்டிடங்களுக்குள் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. போலீசார், மீட்புக் குழுவினர் பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளையும், மீட்புப் பணிகளையும் செய்து வருகிறார்கள்.

அதேபோல் சென்னை மாநகராட்சி ஊழியர்களும், தங்களது பணியை செய்து வருகின்றனர் . இந்நிலையில், கோவை மாநகராட்சியின் சார்பில் மிக்ஜாம் புயல் மீட்புப் பணிகளுக்காக 400க்கும் மேற்பட்ட மாநகராட்சிப் பணியாளர்கள் மற்றும் அவர்களுக்கான தேவையான உபகரணங்கள், அத்தியாவசியப் பொருள்களுடன் கோவை மாநகராட்சி ஆணையார் சிவகுரு பிரபாகரன் சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

இது குறித்து ஆணையாளர் சிவகுரு கூறுகையில், “மிக்ஜாம் புயல் மீட்புப் பணிக்காக முதற்கட்டமாக கோவை மாநகராட்சி பணியாளர்கள் 400 பேரை அனுப்புகிறோம். அவர்களுடன் 20 சூப்பர்வைசர்களும் செல்கிறார்கள். இவர்கள் அனைவரையும் அழைத்துச் செல்ல 10 பேருந்துகள் மற்றும் 5 லாரிகளை ஏற்பாடு செய்து உள்ளளோம். மேலும் மீட்புப் பணி செய்ய தேவையான பவர் சாமிஷின், நான்கு ராட்சத நீர் உறிஞ்சி, பாதுகாப்புக் கவசம், 50 மூட்டை பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு மூட்டை போன்றவைகளை அனுப்பி வைக்கிறோம்.

மேலும் இங்கிருந்து களப்பணிகளுக்காக சென்னை செல்லும் தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான தலையணை, போர்வை, பாய், கைசெலவுக்கு தேவையான பணம் ஆகியவற்றைக் கொடுத்து அனுப்பியுள்ளேம். கோவையில் இருந்து செல்லும் அவர்கள், முதலில் காஞ்சிபுரத்திற்கு சென்று ரிப்போர்ட் செய்துவிட்டு, அங்கிருந்து குழுவாகப் பிரிந்து சென்னை மாநகராட்சிக்குச் செல்வார்கள். மிக்ஜாம் புயல் மீட்புக்காக, அனைத்து கார்ப்பரேஷன் சார்பிலும் ஆட்கள் கேட்கப்பட்டிருக்கிறார்கள். அதன்படி, கோவையில் இருந்து முழு வீச்சில் முதற்கட்டமாக 400 பேரை அனுப்பி வைத்திருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் - நடிகர்கள் சூர்யா, கார்த்தி ரூ.10 லட்சம் நிதிஉதவி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.