பொங்கல் பண்டிகை முன்னிட்டு கோயம்புத்தூரில் சூலூர் நண்பர்கள் நற்பணி இயக்கம் சார்பில் தொடர்ச்சியாகப் பதினெட்டாவது முறையாக நேற்று பரிசல் போட்டி நடைபெற்றது. இதில், ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளுக்கும் தனித்தனியாகப் படகுப்போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் பங்கேற்க கோவை, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
பின்னர் போட்டிகளின் இறுதியில் ஆண்கள் பிரிவில் பவானியைச் சார்ந்த மீனவர் கதிரும், பெண்கள் பிரிவில் சூலூரைச் சேர்ந்த சுப்புலட்சுமியும் வெற்றிபெற்று அசத்தினர். அவர்களுக்குப் பரிசும் ரொக்கப் பணமும் வழங்கப்பட்டன.
இந்தப் பரிசல் போட்டியை ஏராளமான பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்தனர். இதில், சூலூரைச் சேர்ந்த 60 வயது மீனவர் சின்னக்கண்ணன் மூன்றாவது இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காணும் பொங்கல் - களைகட்டிய மெரினா!