ETV Bharat / state

'பச்சை மண்டலமாக மாறிய கோவை': நன்றி தெரிவித்த அமைச்சர் - Tamil latest news

கோவை: பச்சை மண்டலமாக கோவையை மாற்றிய, அதற்காக உதவிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அமைச்சர் வேலுமணி கூறினார்.

நன்றி தெரிவித்த அமைச்சர்
நன்றி தெரிவித்த அமைச்சர்
author img

By

Published : May 15, 2020, 5:44 PM IST

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அமைச்சர் வேலுமணி கூறியதாவது;

'கோவை கரோனா வைரஸ் இல்லாத மண்டலமாக மாறி உள்ள நிலையில், அதற்கு வழிகாட்டிய முதலமைச்சருக்கும், மக்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் கட்டாயமாக முகக்கவசங்கள் அணிந்து வரவேண்டும். கரோனா வைரஸ் தாக்கத்திலிருந்த 26 கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து 23 பகுதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள மூன்று பகுதிகள் இன்னும் மூன்று நாட்களுக்குள் விடுவிக்கப்பட உள்ளன.

அதேபோல் கோவையில் இருந்து வெளி மாநிலங்களுக்குச் செல்லக்கூடிய வெளிமாநிலத்தவர்களுக்கு ஏற்பாடுகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. தாமாக முன் வருபவர்கள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைப் பெற்று, அவரவர்கள் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

அதைப்போல கோவையை கரோனா தொற்று இல்லாத சிறந்த மாவட்டமாக மாற்றிய கோவை மாவட்ட ஆட்சித்தலைவர், காவல் துறையினர், மருத்துவர்கள், செவிலியர், தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்'இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: குமரியில் பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.