ETV Bharat / state

கோவை விமான நிலைய ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் - விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசைக் கண்டித்து

கோவை: விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசைக் கண்டித்து கோவை விமான நிலைய ஊழியர்கள் மூன்று நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

coimbatore
author img

By

Published : Sep 25, 2019, 8:03 PM IST

மத்திய அரசானது இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு (AAI-Airports Authority of India) சொந்தமான விமான நிலையங்களை தனியார்மயமாக்கி வருகின்றது. ஏற்கனவே அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், கவுஹாத்தி, மங்களூரு, திருவனந்தபுரம் விமானநிலையங்கள் தனியார்மயமாக்கும் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன.

இந்நிலையில் அமிர்தசரஸ், புவனேஸ்வர், கோயம்புத்தூர் உள்ளிட்ட மேலும் பத்து விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு தற்போது ஈடுபட்டுள்ளது. எனவே இதனை கண்டித்து, கோவை விமான நிலைய ஊழியர்கள், இன்று முதல் செப்டம்பர் 27ஆம் தேதி வரை, மூன்று நாட்களுக்கு தொடர் உண்ணா விரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், அவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து, மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'மத்திய அரசு தனியார்மயமாக்கலை நிறுத்தவில்லை என்றால், அடுத்தக்கட்டமாக அக்டோபர் 16ஆம் தேதியன்று டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியிலுள்ள இந்திய விமான நிலைய ஆணையத்திற்குச் சென்று போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்தனர்.

கோவை விமான நிலைய ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

27ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போராட்டத்தால் கோவை விமான நிலைய சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் முடிவு - ஊழியர்கள் உண்ணாநிலை

Intro:விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்.Body:விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து அனைத்து ஊழியர்களின் கூட்டமைப்பு சார்பாக உண்ணாவிரதப்போராட்டம் தொடங்கியது.

மத்தியஅரசானது இந்திய விமானநிலையங்கள் ஆணைக்குழுமங்களுக்கு (Airports Authority of India - AAI) சொந்தமான விமானநிலையங்களை தனியார் மயமாக்கி வருகின்றது. ஏற்கனவே அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், ஹவுஹாத்தி, மங்களூரு மற்றும் திருவனந்தபுரம் விமானநிலையங்களை தனியார் மயமாக்கும் பொருட்டு, விமானத்துறைக்கு சிறிதும் சம்பந்தமோ தொடர்போ இல்லாத அதானி குழுமம் என்ற ஒற்றை நிறுவனத்திற்கு தாரை வார்த்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அமிர்தசரஸ், புவனேஸ்வரம், கோயம்புத்தூர், இந்தூர், கோழிக்கோடு, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, திருச்சிராப்பள்ளி மற்றும் வாரணாசி ஆகிய 10 இந்திய விமான நிலையங்கள் ஆணைக்குழுமங்களுக்கு சொந்தமான விமானநிலையங்களை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் தூணான பொதுத்துறை நிறுவனங்களை (Public Sector Undertakings - PSU) சிதைக்கும் முயற்சியில் , மத்தியஅரசு செயல்பட்டு வருவதை கண்டிக்கும் விதத்தில், இந்திய விமான நிலைய ஆணைக்குழும ஊழியர்கள் , இன்று முதல் மூன்று நாட்களுக்கு தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கருப்பு பேட்ஜ் அணிந்து, மத்திய அரசை கண்டித்து கோசங்களை எழுப்பினர். மத்திய அரசு தனியார் மயமாக்கலை நிறுத்த வில்லை என்றால், அடுத்த கட்டமாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் அக்டோபர் 16 ஆம் தேதியன்று போராட்டம் நடத்த இருப்பதாகவும், அதற்கும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றால் சாகும் வரை தொடர் போராட்டம் நடத்த இருப்பதாக கோவை விமான நிலைய ஊழியர்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

மேலும் இந்திய விமான நிலைய ஆணையக்குழு ஊழியர்கள் சார்பாக டெல்லி மற்றும் பம்பாய் விமான நிலையங்கள் தனியாருக்கு கொடுக்க முயற்சிக்கும் போதே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் இந்திய விமான நிலைய ஆணையக்குழுவிற்கு சொந்தமான எந்த ஒரு விமான நிலையத்தையும் தனியார் மயமாக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

புதிதாக கட்டப்படும் விமான நிலையங்களை தனியார் மயமாக்கலை எதிர்க்கவில்லை எனவும் , இந்திய விமான நிலைய ஆணையக்குழுவிற்கு சொந்தமான விமான நிலையங்களை தனியார் மயமாக்குவதைதான் எதிர்ப்பதாக தெரிவித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.