ETV Bharat / state

கோவை தொகுதியில் 5,527 தபால் வாக்குகள் - ஆட்சியர் தகவல் - voting count

கோவை: மக்களவைத் தொகுதியில் இதுவரை 5,527 தபால் ஓட்டுகள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

இராசாமணி
author img

By

Published : May 22, 2019, 10:41 PM IST

கோவை மக்களவைத் தொகுதி, சூலூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாளை காலை 8 மணியளவில் கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரியில் தொடங்குகிறது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் ராசாமணி, காவல்துறை அலுவலர்களுடன் வாக்கு எண்ணும் மையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் ராசாமணி, "வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூன்றடுக்கு காவல் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணிக்கு 100 விழுக்காடு ஆயுத்தமாக உள்ளது. ஆறு சட்டப்பேரவை தொகுதிக்கு 14 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக பல்லடம் தொகுதிக்கு 30 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும். தேர்தல் ஆணையம் வழங்கிய அடையாள அட்டை இல்லாமல் யாரும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட தாமதமாக வாய்ப்புள்ளது என்றாலும் நிதானமாகவே வாக்குகள் எண்ணப்படும். ஆனால், முடிந்தவரை விரைவாக முடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மொத்தமாக 12 ஆயிரம் தபால் ஓட்டுக்கள் அனுப்பப்பட்ட நிலையில் நாளை காலை வரை தபால் வாக்குகள் பெறப்படும். இதுவரை 5,527 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளது" என்றும் அவர் கூறினார்.

சு.சீனிவாசன்.       கோவை

பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 5 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குகள் 8 மணிக்கு எண்ண துவங்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள சலுகையின் படி ஆட்சியருக்கு உள்ள அதிகாரத்தால் ஒரே ஒரு சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் வாக்கு எண்ணிக்கை 8.30க்கு துவங்கப்படும் எனவும் கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணி தெரிவித்துள்ளார்.

கோவை பாராளுமன்ற தொகுதி மற்றும் சூலூர் இடைத்தேர்தல் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணி நாளை காலை 8 மணியளவில் கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரியில் (ஜி.சி.டி) துவங்க உள்ளது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் இராசாமணி, காவல்துறை அதிகாரிகள் மற்றும் இதர அதிகாரிகளுடன் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இயந்திரங்கள் 3 அடுக்கு காவல் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது எனவும் வாக்கு எண்ணும் பணிக்கு 100 விழுக்காடு ஆயத்தமாக உள்ளதாகவும் கூறினார். 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 14 மேசைகள் வீதம் அமைக்கப்பட்டுள்ளது எனக்கூறிய அவர் கவுண்டம்பாளையம் தொகுதிக்கு மட்டும் 20 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளது எனவும் அதிகபட்சமாக பல்லடம் தொகுதிக்கு 30 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும் எனவும் கூறினார். 1500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் எனக்கூறிய அவர் தேர்தல் ஆணையம் வழங்கிய அடையாள அட்டை இல்லாமல் யாரும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் கூறினார். முகவர்கள் பேனா மற்றும் கையேடு மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் வாக்கு எண்ணும் மையத்திற்கு மட்டும் சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது எனவும் 144 தடையுத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை எனவும் கூறினார். முடிவுகள் அறிவிக்கப்பட தாமதமாக வாய்ப்புள்ளது என்றாலும்
நிதானமாகவே வாக்குகள் எண்ணப்படும் ஆனால் முடிந்தவரை விரைவாக முடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். கடந்த கால அனுபவங்களை கணக்கில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறிய அவர் 3 அடுக்கு சோதனைக்கு பிறகே முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறினார். மொத்தமாக 12 ஆயிரம் தபால் ஓட்டுக்கள் அனுப்பப்பட்ட நிலையில் நாளை காலை வரை தபால் வாக்குகள் பெறப்படும் எனவும் இதுவதை 5527 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் இராசாமணி கூறினார்.

Video in reporter app
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.