கோயம்புத்தூரில் தொடர்ந்து கரோனா பாதிப்புகள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில், கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு துடியலூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த 31 காவலர்களுக்கு கரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் ஒரு பெண் காவலர் உள்பட ஐந்து காவலர்களுக்கு கரானா தொற்று உறுதியானது. இதைத் தொடர்ந்து தொற்று ஏற்பட்ட ஐந்து காவலர்களும் கோயம்புத்தூர் இ.எஸ்.ஐ. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து துடியலூர் காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது. அருகே உள்ள திருமண மண்டபத்திற்கு காவல் நிலையம் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது. இதேபோல கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஆண் காவலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, அக்காவல் நிலையமும் மூடப்பட்டுள்ளது.
காவலர்களுக்கு கரோனா: இரு காவல் நிலையங்கள் மூடல் - சூலூர் காவல் நிலையம்
கோவை: காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, துடியலூர், சூலூர் காவல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.