கோயம்புத்தூர் மாவட்டம் உக்கடத்தை அடுத்த பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்(12). இவர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி அங்குள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இவரது தந்தை பாலன் உக்கடம் பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய்களில் இருந்து மண்ணை அள்ளி அதில் இருக்கும் தங்க துகள்களை சேகரித்து விற்பனை செய்து வருகிறார்.
இந்த நிலையில் பள்ளி விடுமுறையை முன்னிட்டு, கோவையில் உள்ள தனது வீட்டுக்கு வந்த விக்னேஷ், தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உறவினர்களுடன் சேர்ந்து கோவை இடையர் வீதி பகுதியில் உள்ள சாக்கடையில் தங்கத் துகள்களை சேகரிக்க சென்றுள்ளார்.
அந்த வகையில், சாக்கடையில் இறங்கி தங்கத் துகள்களை தேடி கொண்டிருந்தபோது நடுவே இருந்த கேபிளில் சிக்கிய சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து போலீஸ்சாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவயிடத்துக்கு விரைந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் விஷவாயு தாக்கி உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. உடற்கூராய்வின் முடிவுக்காக போலீசார் காத்திருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மோர்பி பாலம் விபத்து: 135 குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு