ETV Bharat / state

கோவை மத்திய சிறையில் கைதிகள், காவலர்கள் இடையே மோதல் - 4 காவலர்கள் படுகாயம்! - கோவை மத்திய சிறையில் சிறைக்கைதிகள் மோதல்

Prisoners - police clash in Coimbatore central jail: கோவை மத்திய சிறைச்சாலையில் சோதனையின்போது கைதிகள் தாக்கியதில் படுகாயம் அடைந்த காவலர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2023, 5:13 PM IST

மத்திய சிறச்சாலையில் கைதிகள் காவலர்கள் இடையே மோதல்

கோயம்புத்தூர்: கோவை மத்திய சிறையில் 2,000க்கும் மேற்பட்ட தண்டனைக் கைதிகளும், 500க்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் செல்போன் மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க சிறை வளாகத்தில் அவ்வப்போது சிறைக் காவலர்கள் திடீர் சோதனை நடத்துவது வழக்கம்.

அதன்படி இன்று (செப்.21) காலை வழக்கம்போல சிறைக்காவலர்கள் வால் மேடு என்ற பகுதிக்கு சோதனைக்குச் சென்றுள்ளனர். அப்போது இரண்டாவது வால் ப்ளாக் பகுதியில் உள்ள சிறைக் கைதிகள் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்து சிறைக் காவலர்களுக்கும், கைதிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து சிறைக் காவலர்கள் கைதிகளை தாக்கியதாகவும், தொடர்ந்து பதிலுக்கு சிறைக் காவலர்களை கைதிகள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் ராகுல், மோகன்ராம், பாபுஜான், விமல்ராஜ் ஆகிய நான்கு சிறைக் காவலர்கள் காயமடைந்தனர்.

அதன் பின்னர் காயம் அடைந்த சிறைக் காவலர்கள், உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே சிறை வளாகத்தில் மரத்தின் மீது ஏறிக்கொண்ட கைதிகள், கைகளில் பிளேடால் கீறிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை சமரசப்படுத்திய சிறைக் காவல் அதிகாரிகள், காயமடைந்த சிறை கைதிகள் தினேஷ், அய்யனார், அழகர்சாமி, ஹரிகரன், கிஷோர், அரவிந்த், உதயகுமார் ஆகிய 7 கைதிகளுக்கு சிறைச்சாலை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

அதனையடுத்து, கோவை மத்திய சிறையிம் நிகழ்ந்த மோதல் சம்பவம் குறித்து, கோவை சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் சிறை வளாகத்தில் நேரில் வந்து, சிறைத்துறை அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டார். மேலும், சிறைச்சாலையில் கைதிகள் தாக்கியதில் காயமடைந்து, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறைக் காவலர்களை, கோவை மாநகர துணை ஆணையர் சந்தீஸ் நேரில் சென்று சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

சிறைக் கைதிகளை பார்க்க வருபவர்கள் உணவுப் பொருட்கள் மற்றும் உடமைக்குள் மறைத்து வைத்து, தடை செய்யப்பட்ட பொருட்களை அவ்வப்போது சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படுவதை தடுக்கவும், சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்பாட்டைத் தடுக்க, அவ்வப்போது திடீர் சோதனை நடத்தப்படுகிறது.

இந்நிலையில், சிறைவளாகத்தில் நடைபெற்றுள்ள மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பிற்காக கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு சிறைக் கைதிகள் உள்ள வால்மேடு பகுதியில் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும், சிறைக்கைதிகள் தாக்கியதில் சிறைக் காவலர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் காவல் துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகை: இணையதள சேவை முடக்கம் பொதுமக்கள் அவதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.