ETV Bharat / state

சீன அதிபர், பிரதமர் மோடி வருகை - பலத்த பாதுகாப்பில் மாமல்லபுரம்! - சீன அதிபர் ஜி ஜின்பிங்

சென்னை: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி சென்னை, மாமல்லபுரத்தில் பலத்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

tamilnadu police
author img

By

Published : Oct 7, 2019, 9:45 PM IST

வரும் 11ஆம் தேதி சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடி ஆகிய இருவரும் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளனர். இதையடுத்து, அங்குள்ள சிற்ப கலைகள் நிறைந்த கட்டடங்களான அர்ஜுன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்டவற்றை பார்வையிடுகின்றனர்.

இந்நிகழ்வில், இருநாட்டுத் தலைவர்களும் இரு நாட்டு உறவு, வர்த்தக மேம்பாடு, முக்கிய பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். மேலும், இப்பேச்சுவார்தையில் சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, சீன அதிபர் வருகையையொட்டி சென்னை, மாமல்லபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதன் படி, வரும் 11ஆம் தேதி சீன அதிபர் வரும் விமானம் சென்னையில் தரையிறங்கும்போது, அந்த வேளையில் பயணிகள், சரக்கு விமானங்கள் போக்குவரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அங்கிருந்து சாலை மார்க்கமாக இரு தலைவர்களும் செல்வதால், செல்லும் வழியிலுள்ள உயரிய கட்டடங்கள், விடுதிகள், பொதுமக்கள் கூடுமிடங்கள் என அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக பதினாறு துணை ஆணையர்கள் தலைமையில், 3 கூடுதல் துணை ஆணையர்கள், 45 உதவி ஆணையர்கள், 133 ஆய்வாளர்கள் உட்பட 5000 காவல்துறையினர் பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும், தற்போது காவல்துறையினர் முழு வீச்சில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

சென்னையில் திபெத்தியர்களை கண்காணிக்க உத்தரவு!

Intro:Body:*சென்னை - சீன பிரதமர், மோடி வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள்*

இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்திய மற்றும் சீன நாடுகளுக்கிடையே எல்லை பிரச்சனைகள் இருந்து வந்தாலும் வர்த்தகம், பொருளாதாரம் தொடர்பான உறவுகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. இரு நாடுகளின் நல்லுறவை மேம்படுத்த ஏற்கனவே சில முறை இந்திய பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய இரு தலைவர்களும் சந்தித்து பேசியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் ஒருமுறை இவ்விரு தலைவர்களும் வரும் 11 ஆம் தேதி மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். அரசு முறை பயணமாக அன்றைய தினம் தனி விமானம் மூலம் தனது அதிகாரிகள் குழுவுடன் சென்னை வரும் சீன அதிபர் ஜி ஜுன்பிங், சென்னை விமான நிலையத்தில் இசை நிகழ்ச்சிகளுடன் கூடிய சிறப்பு வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு சென்னை கிண்டியில் உள்ள தனார் நட்சத்திர விடுதியில் ஓய்வெடுக்கும் சீன அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு, மாலை குண்டு துளைக்காத காரில் முழு பாதுகாப்புடன் மாமல்லபுரம் சென்று அங்குள்ள சிற்ப கலைகள் நிறைந்த கட்டிடங்களான அர்ஜுன் தபசு, 5 ரதம், கடற்கரை கோவில் உள்ளிட்டவற்றை பார்வையிட்ட பின்னர், முக்கிய பிரமுகர்களை சந்தித்துவிட்டு மீண்டும் கிண்டி நட்சத்திர விடுதிக்கு திரும்பவுள்ளார். மீண்டும் 12 ஆம் தேதி காலை மாமல்லபுரம் செல்லும் சீன அதிபர் ஜி ஜின்பிங் அங்கு பிரதமர் மோடியுடன் இரு நாட்டு உறவு, வர்த்தக மேம்பாடு உள்ளிட்டவை குறித்தும் முக்கிய பிரச்சனைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் மீண்டும் சென்னை பழைய விமான நிலையம் வரும் சீன அதிபர் அங்கு நடைபெறும் வழியனுப்பும் நிகழ்ச்சிக்கு பின்னர் தனி விமானத்தில் சீனா புறப்பட்டு செல்கிறார்.

இந்நிலையில் வரும் 11 ஆம் தேதி சீன அதிபர் வரும் விமானம் தரையிரங்கும் தினமும், 12 ஆம் தேதி அவர் புறப்பட்டு செல்லும் தினமும் 15 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை பயணிகள் மற்றும் சரக்கு விமானங்கள் பறக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் வரும் நேரத்திலும் புறப்பட்டு செல்லும் நேரத்திலும் வந்துபோகும் விமானங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டு பயணிகளுக்கு தகவல் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய பிரதமர் மற்றும் சீன அதிபரின் வருகையையொட்டி சென்னை மற்றும் மாமல்லபுரம் பகுதிகளில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அவர் சாலை மார்கமாக செல்லும் வழிதடங்கள், அங்குள்ள உயரிய கட்டிடங்கள், அருகாமை பகுதிகளில் உள்ள விடுதிகள் என அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை வழிநடத்த 16 துணை ஆணையர்கள் தலைமையில் 3 கூடுதல் துணை ஆணையர்கள், 45 உதவி ஆணையர்கள், 133 ஆய்வாளர்கள் உட்பட 5000 காவல்துறையினர் பணியில் ஈடுபடவுள்ளனர். பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தற்போது முதலே தீவிரப்படுத்தப்பட்டு காவல்துறையினர் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.