இந்திய-சீன எல்லையில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் சீன ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். அதனால் சீன ராணுவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக கோயம்புத்தூர் காந்திபுரத்தில் உள்ள பாஜக அலுவலகம் முன்பு, அக்கட்சியினர் இந்திய ராணுவ வீரர்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
அதையடுத்து அவர்கள் சீன தேசிய கொடியை எரிப்பதற்கு முற்பட்டனர். அப்போது பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினர் அதனைத் தடுத்ததால் அவர்கள் கொடியை கிழித்து வீசினர்.
இதையடுத்து சீன செல்போன்களும் உடைத்து எரியப்பட்டன. அதேபோல் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சியினர் சீனாவைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: வால்பாறை கொண்டை ஊசி வளைவு - ஒளித்திரைகளை புதுப்பிக்க கோரிக்கை!