ETV Bharat / state

‘சிதம்பரம் கோயில் முன்பு போராடத் தயங்க மாட்டேன்’ - அண்ணாமலை எச்சரிக்கை! - ராஜ்பவன்

சிதம்பரம் கோயில் விவகாரத்தில் மாநில அரசு தீட்சிதர்களுக்குத் தொந்தரவு கொடுக்காதீர்கள். மீறிக் கொடுத்தால் கோயில் முன்பு நானே போராடத் தயங்கமாட்டேன் என அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

chidambaram-temple-issue-annamalai-warning-campaign
சிதம்பரம் கோவில் முன்பு பேராட தயங்கமாட்டேன் :அண்ணாமலை எச்சரிக்கை .
author img

By

Published : Jun 30, 2023, 9:10 PM IST

செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை

கோயம்புத்தூர் : ஈரோடு செல்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “அமைச்சரை நீக்க ஆளுநருக்கு உரிமை இருக்கா? என்பதில் பாஜக உள்ளே செல்ல விரும்பவில்லை. ஆனால் மு.க. ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருக்கும் போது அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என கடந்த காலங்களில் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் எதிர்கட்சி வரிசையில் இருந்த ஸ்டாலின், முதலமைச்சரான பிறகு எப்படி எதிர்க்கிறார் என தெரியவில்லை. முதலமைச்சர் இரட்டை வேடம் போடுகிறார். உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலின் படி ஆளுனர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். செந்தில் பாலாஜி ஊழல்வாதி என்பது முதலமைச்சருக்கு தெரியும். ஆனால், முதலமைச்சர் வரம்பு மீறி செயல்படுகிறார்.

முதலமைச்சரின் கவனம் ஐந்தாண்டுகளில் இப்படி மாறியுள்ளது ஏன் என்று தெரியவில்லை. ஆளுநர் சார்பாக நாங்கள் பேச முடியாது. ராஜ்பவன் வேறு பாஜக வேறு, ஆனால் கடிதத்தை படிக்கும் போது தமிழ்நாடு அமைச்சரவையில் 99% அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. பலருக்கு நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஆளுநர் அனைவரும் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்தில் பாலாஜி மீது தனிப்பட்ட முறையில் வெறுப்பு இல்லை. அவர் செய்த குற்றத்தின் மீது தான் வெறுப்பு. இது தனிமனித தாக்குதல் கிடையாது முதலமைச்சர் நடந்து கொள்வது தர்மத்திற்கு விரோதமானது.

ஒரு மனிதனுக்காக அரசங்கத்தை களத்தில் இறக்கிவிட்டுள்ளனர். கல் குவாரிகள் தமிழ்நாடு முழுவதும் ஸ்ட்ரைக் செய்துள்ளனர். கரூரில் கட்சி வாரியாக குவாரிகள் இயங்கி வருகிறது. ஆனால் ஆட்சிக்கு வரக்கூடிய கட்சி மற்ற கட்சிகளை பழி வாங்குகிறது. இதை அரசு சரி செய்ய வேண்டும். செந்தில் பாலாஜியின் தம்பி தலைமறைவாக உள்ளார்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “சிதம்பரம் கோயில் பற்றி பொதுப்பார்வை இல்லாமல் இருக்கிறது. பொட்டு தீக்சிதர் கட்டுப்பாட்டில் சிதம்பரம் கோயில் உள்ள நிலையில், மாநில அரசு கோவிலை கட்டுபடுத்த நினைக்கிறது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு மீறி அரசாங்கம் செயல்படுகிறது. மாநில அரசு அவர்களுக்குத் தொந்தரவு கொடுக்காதீர்கள். மீறி கொடுத்தால் கோயில் முன்பு நானே போராட தயங்கமாட்டேன்” என்றார்.

மேலும், “வருகின்ற ஜீலை 28ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து நடைபயணத்தை தொடங்கவுள்ளேன். இதனை அமித்சா தொடங்கி வைக்கவுள்ளார். கட்சி நிகழ்வாக ஆப்ரிக்கா செல்ல இருப்பதாலும், உள்துறை அமைச்சரின் நேரம் கிடைக்க வேண்டி உள்ளதால் நடைபயணம் தாமதமாகிறது. மாமன்னன் படம் இன்னும் பார்க்கவில்லை, யார் மனதையும் புண்படுத்தமால் இருக்குமாறு படம் எடுக்க வேண்டும்” என்றார்.

நீங்கள் சினிமாவில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, “நிஜத்தில் நான் நடிக்க தெரியாதவன்” என்றார். விஜய் அரசியல் வருவதாக கூறும் கேள்விக்கு, “யார் வேண்டுமானால் அரசியலுக்கு வர வேண்டும். விஜய் வந்தால் வரட்டும்” என்றார். மேலும், விஜய் படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிக்கு கண்டனம் எழுந்தது குறித்த கேள்விக்கு, “படத்தில் புகைபிடிப்பதால் இளைஞர்கள் , குழந்தைகள் அதை பின்பற்றி கெட்டு போவாங்க என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

சாலையில் கூடதான் புகைப்பிடிக்க செய்கிறார்கள். அதை பார்த்து கெட்டு போகமாட்டார்களா? ஆனால் மத்திய அரசின் சென்சார் போர்டு விதி முறைகளை பின்பற்றி மறைக்க வேண்டியதை மறைத்து, வாசகங்களை போட்டு படத்தை வெளியிட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க :Senthil Balaji: செந்தில் பாலாஜியின் பதவி நீக்கம் நிறுத்தி வைப்பு - ஆளுநர் கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.