ETV Bharat / state

Chennai SubWay: இயல்புநிலைக்குத் திரும்பும் சுரங்கப் பாதைகள் - சுரங்க பாதை இயல்பு நிலைக்கு திரும்பியது

சென்னையில் உள்ள அனைத்து சுரங்கப் பாதைகளிலும் (SubWay) நீர் வெளியேற்றப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

author img

By

Published : Nov 17, 2021, 8:27 PM IST

சென்னை: சென்னையில் சென்ற வாரம் பெய்த கனமழை காரணமாகப் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி இருந்தது.

குறிப்பாக, சாலைகள், சுரங்கங்கள் போன்றவற்றில் நீர் முழுவதுமாக தேங்கிக் கிடந்தது.

இதனால்,நடந்து செல்பவர்களுக்கும், வாகனத்தில் செல்பவர்களுக்கும் பெரும் அவதியாக இருந்தது. ஆகையால்,நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

22 சுரங்கப் பாதைகளிலும் நீர் தேங்கியது:

சென்னை மாநகரட்சியின்கீழ் வரும் 22 சுரங்கப் பாதைகளும் நீரால் தேங்கி நின்றது. இதனால், போக்குவரத்து பெரும் பாதிப்பிற்கு உள்ளானது. குறிப்பாக, சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதை, தியாகராய நகர் துரைசாமி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் உள்ளிட்டப் பல முக்கிய சுரங்கப் பாதைகள் நீரால் நிரம்பியது.

மாநகராட்சி ஊழியர்கள் இரவும், பகலுமாய் வேலை செய்து, அதிக திறன் கொண்ட மோட்டார்களைக் கொண்டு நீரை வெளியேற்றினர்.

மீண்டும் தொடங்கிய பாதைகள்:

ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதையில் தொடர்ந்து மழை நீர் வெளியேற்றும் பணி முடிந்து இன்று பயன்பாட்டிற்கு வந்தது.

மேலும் இன்று காலை 8 மணி நிலவரப்படி, சென்னை மாநகராட்சியில் மழை நீர் தேங்கிய 778 இடங்களில் 750 இடங்களில் தேங்கிய மழை நீர் (Rain Water) முழுவதுமாக வெளியேற்றபட்டுள்ளது.

மீதமுள்ள 28 இடங்களில் மழை நீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி: 7 ஆண்டுகளாக தனி ஆளாக போராடும் 70 வயது மூதாட்டி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.