சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 36 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், பிரபல ரவுடியாக வலம் வந்த இவரை என்கவுண்டர் செய்ய சென்னை மாநகர காவல் துறையினர் திட்டமிட்டு இருந்துள்ளனர்.
இதனையறிந்த ராதாகிருஷ்ணன் சென்னையிலிருந்து வெளியேறி தலைமறைவாக இருந்துள்ளார். பின்பு, காவல் துறையினர் ராதாகிருஷ்ணன் எங்கு பதுங்கி உள்ளார் என்பது குறித்து விசாரித்து வந்த போது அவர், கோவையில் தலைமறைவாக இருப்பது ஓ.சி.ஐ.யு உளவு பிரிவு காவல் துறையினருக்குத் தெரியவந்தது.
மேலும், ரவுடி ராதாகிருஷ்ணன் காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு வந்து செல்வதை உறுதி செய்த ஓ.சி.ஐ.யு உளவு பிரிவினர், சிங்காநல்லூர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் சிகிச்சைக்காக வந்த ராதாகிருஷ்ணனை சிங்காநல்லூர் காவல் துறையினர் கைது செய்தனர். ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட தகவல் சென்னை அரும்பாக்கம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், ராதாகிருஷ்ணன் சென்னை காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதையும் படிங்க : ஆசிட் வீசிய மாணவன் உட்பட 27 பேர் குண்டர் சட்டத்தில் கைது! கடலூரில் அதிரடி!