கோயம்புத்தூர் உக்கடம் கோட்டைமேடு பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அமலாக்கத் துறை அலுவலர்கள் நேற்று மாலை இங்கு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதற்காக 50க்கும் மேற்பட்ட கோவை மாநகர காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே அமலாக்கத்துறையினரின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ கட்சியின் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
இதனையடுத்து இரவு 11 மணி அளவில் நிறைவடைந்த சோதனையின் முடிவில் ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை