கோவை மாவட்டம், அன்னூர் பேருந்து நிலையத்தில், கடந்த 10ஆம் தேதி பிரவீன் குமார் பேருந்தில் ஏறும் போது அவரது 15,000 மதிப்புள்ள செல்போன் திருடு போயுள்ளது. இதையடுத்து அவர் இதுகுறித்து அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் அன்னூர் காவலர்கள் அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒருவர் அன்னூர் பேருந்து நிலையத்தில் செல்போனை திருடிக்கொண்டு சிறிது தூரம் சென்று மற்றொருவரின் மோட்டார் இருசக்கரவாகனத்தில் ஏறி செல்வது பதிவாகி இருந்தது.
இதையடுத்து காவல்துறையினர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவரை கைது செய்து விசாரித்ததில் அவர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சிவா(எ) முருகேஷ் என்பது தெரியவந்தது. பிறகு அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
சிசிடிவி கேமராக்கள் மூலம் இது போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை எளிதாக கைது செய்ய முடிகிறது என்பதால், பொதுமக்கள் அவரவர்களது இல்லத்தில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தவேண்டும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: இ-பாஸ் இருந்தால் மட்டுமே வால்பாறைக்கு செல்ல அனுமதி!