ETV Bharat / state

கோயில் திருவிழாவில் இருதரப்பினர் இடையே மோதல் - ஆறு பேர் காயம் - six memers injured

கோவை: குமிட்டிபதி பகுதியில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் இரு சமுதாயத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஆறு பேர் காயமடைந்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள்
author img

By

Published : May 9, 2019, 12:54 PM IST

Updated : May 9, 2019, 1:05 PM IST

கோவை மாவட்டம், மதுக்கரை அருகே குமிட்டிபதி என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள மாரியம்மன் கோயிலில் நேற்று திருவிழா நடைபெற்றது. இதையொட்டி ஒருபிரிவினர் நடனமாடிக் கொண்டே மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு சென்றுள்ளனர்.

செய்தியாளர்களிடம் பேசிய பாதிக்கப்பட்டவர்கள்

இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தில் சுமார் ஆறு பேர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அசாம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சு.சீனிவாசன்.       கோவை

கோவை மாவட்டம் குமிட்டிபதி பகுதியில் கோவில் திருவிழாவில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது

கோவை மாவட்டம் மதுக்கரை அருகே குமிட்டிபதி என்ற கிராமம் உள்ளது. அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி தாழ்த்தப்பட்ட மக்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது ஜமாப் அடித்தப்படி தாழ்த்தப்பட்ட இளைஞர்களை சென்றதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜமாப் அடிக்க கூடாது என கூறியதை ஏற்க மறுத்ததால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் மீது மற்றொரு தரப்பினர், சாதிப்பெயரை சொல்லி இழிவுபடுத்தி, கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த 6 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இச்சம்பவம் குறித்து க.க.சாவடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Video in ftp

TN_CBE_1_9_TEMPLE ISSUE_9020856
Last Updated : May 9, 2019, 1:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.