ETV Bharat / state

வாக்களிக்க வந்த புதுமணத் தம்பதி - couple

கோவை: புதுமணத் தம்பதி மணக் கோலத்தில் வாக்களிக்க வந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

புதுமணத் தம்பதிகள்
author img

By

Published : May 20, 2019, 7:57 AM IST

மே 19ஆம் தேதி காலை ஏழு மணி முதல் சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்றது.

வாக்களிக்க வந்த புதுமணத் தம்பதிகள்

இந்நிலையில், மாலை நான்கு மணியளவில் கோவை மாவட்டம் சூலூர் தொகுதிக்குட்பட்ட கருமத்தம்பட்டி புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளியில் சிந்தியா என்ற மணப்பெண் தனது திருமண வரவேற்பு நிகழ்வினை முடித்துவிட்டு கணவர் அமல்ராஜுவுடன் மணக் கோலத்திலேயே வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.

இதேபோல் இதே வாக்குச் சாவடிக்கு, கர்ப்பிணி பெண் இன்பேண்டா என்பவர் அவரது வளைகாப்பை முடித்த கையோடு வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.

தங்களது சுபகாரியங்களுக்கிடையேயும் ஜனநாயகக் கடமையாற்றிய இப்பெண்கள் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

சு.சீனிவாசன்.     கோவை

கோவை கருமத்தம்பட்டி புனித மரியன்னை உயர் நிலைப்பள்ளியில் வளைகாப்பு நிகழ்வு முடிந்த கர்பிணி பெண் ஒருவரும், திருமண வரவேற்பு முடிந்த பின்னர் புதுமண தம்பதியும்
வாக்கு சாவடிக்கு நேரில் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

கோவை சூலூர் சட்டமன்ற தொகுதி் வாக்கு பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று மாலை 4 மணி அளவில்  கருமத்தம்பட்டியை சேர்ந்த இன்பான்டா என்ற கர்பிணி பெண் கோவையில் வளைகாப்பு முடிந்தவுடன் கருமத்தம்பட்டி புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளி  வாக்குசாவடிக்கு  
வந்து வாக்களித்தார். வாக்களிப்பது நமது கடமை என்பதால், வளைகாப்பு நிகழ்வு முடிந்தவுடன் வந்து வாக்களித்துள்ளதாக கர்பிணி பெண் இன்பான்டா தெரிவித்தார்.

இதே போன்று கருமத்தம்பட்டி புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளியில் திருமண  வரவேற்பு நிகழ்வினை முடித்துக்கொண்டு மண கோலத்திலேயே தனது கணவர் அமல்ராஜூடன்  சிந்தியா என்ற மணப்பெண்  வந்து வாக்குபதிவு செய்தார்.
சிந்தியா -அமல்ராஜ் ஆகியோருக்கு கடந்த வாரம் சென்னையில் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று கோவையில் திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்விற்கு பின்னர் மணப்பெண் சிந்தியா தனது  கணவருடன் வந்து வாக்கினை பதிவு செய்தார். பின்னர் பேசிய அவர் வாக்களிப்பது நமது கடமை என்பதால், திருமண வரவேற்பு முடிந்தவுடன் வந்து வாக்கினை செலுத்தி தனது ஜனநாயக கடமையினை செய்து முடித்துஇருப்பதாக மணப்பண் சிந்தியா தெரிவித்தார்.

Video in reporter app
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.